பாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்!
6-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி: கிளாஸில் பாடம் நடத்தும்போது 3 மாணவிகளின் உடம்பில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட வாத்தியாரை மகளிர் போலீசார் அள்ளி கொண்டு போய் ஸ்டேனில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் ஒரு தனியார் நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் டேவிட்ராஜ். 46 வயசாகிறது. இவர் படந்தால்மூடு பகுதியை சேர்ந்தவர். 6-ம் வகுப்புக்கு பாடம் நடத்துகிறார். இங்கு 3 மாணவிகளிடம் தொடர்ந்து டேவிட்ராஜ், அத்துமீறி நடப்பதாக மாணவிகள் புகார் கூறினர்.
போன வெள்ளிக்கிழமையும் கிளாஸ் ரூமில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அதே குறிப்பிட்ட 3 பேரின் உடம்பில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதனர்.
இதை கேட்டு கொதித்து போன பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியரும் கொல்லங்கோடு போலீசிலும் புகார் தந்தார். அதன்பேரில், போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் வாத்தியார் அத்துமீறியது உண்மைதான் என தெரியவந்தது.
பின்னர் டேவிட் ராஜை கொல்லங்கோடு போலீசார் அழைத்து சென்று குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசாரும் வாத்தியார் டேவிட்ராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications