Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்கு வாங்க.. கதறிய பெண்.. தட்டிக்கேட்ட குடும்பத்தையே மாட்டிவிட்ட பாதிரியார்.. கிரிமினல் மைண்ட்

நியாயம் கேட்க வந்த பெண்ணின் குடும்பத்தையே இவர் போலீசில் மாட்டிவிட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பாதிரியார் ஒருவர் பெண்களை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தவறுகளை தட்டிக்கேட்ட பெண்ணின் குடும்பத்தாரையே இவர் நேக்காக போலீசில் சிக்க வைத்த சம்பவங்களும் கூட நடந்து உள்ளன.

கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதபோதகர் பெனெடிக் ஆண்டோ தலைமறைவாகி உள்ளார். சர்ச்சுக்கு வரும் பெண்களை ஏமாற்றி, அவர்களை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதோடு, அவர்களிடம் இருந்து இந்த பாதிரியார் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் தொடர்பாக பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், விஷயங்கள் வெளியாகி உள்ளன.

தலைமறைவு

தலைமறைவு

நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் பெனெடிக் ஆண்டோ மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் போலீசார் விரைவில் பெனெடிக் ஆண்டோவை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது பெங்களூரில் தலைமறைவாகி உள்ளாராம். இரண்டு நாட்களாக அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இவரின் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆபாச வீடியோக்கள் பல அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இவர் தற்போது அந்த கிறிஸ்துவ வழிபாட்டு தலத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெண்கள்

பெண்கள்

இந்த நிலையில்தான் இவரின் தவறுகளை தட்டிக்கேட்ட பெண்ணின் குடும்பத்தரையே இவர் நேக்காக போலீசில் சிக்க வைத்த சம்பவங்களும் கூட நடந்து உள்ளன. அதன்படி இவர் பெண் ஒருவரை பல நாள் பழகி ஏமாற்றி உள்ளார். நெருக்கமாக பழகி ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றி உள்ளார். தேவாலயத்திற்கு வந்த அந்த பெண்ணிடம் பேசி அவர்களின் போன் எண்களை வாங்கி உள்ளார். அதன்பின் அவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசி உள்ளார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். இவரின் பேச்சில் அந்த பெண் அப்படியே மயங்கி உள்ளனர். இது அதன்பின் வீடியோ கால் வரை சென்றுள்ளது.

மோசம்

மோசம்

வீடியோ காலில் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். அதோடு அவர்களை நிர்வாணமாக நிற்க சொல்லி அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். இது போக அந்த பெண்ணை தனியாக அழைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இந்த ஆபாச வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி இருக்கிறார். அவருடன் பாலியல் உறவு வைத்து இருக்கும் வீடியோவை வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இப்படி ஒரு பெண் அல்ல பல பெண்களிடம் அவர் தவறாக நடந்து இருக்கிறார். இப்படி அவர் வேலையை காட்டி பெண் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் இவரிடம் நியாயம் கேட்டுள்ளனர்.அந்த பெண் தன் அண்ணன்களிடம் கதறி விஷயத்தை சொல்ல அந்த அண்ணன்கள் இதை பற்றி பாதிரியாரிடம் விசாரித்து உள்ளனர்.

போன்

போன்

இவரிடம் போனில் பேசிய அந்த ஆண்களை.. வீட்டிற்கு வாருங்கள் விளக்குகிறேன் என்று கூறி இருக்கிறார். இவர்களும் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, இவர்கள் தங்கள் வீட்டில் திருட வந்ததாக போலீசுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார், அதோடு போலீசாரும் இவர் சொன்னதை நம்பி, அவர்களை கைது செய்து வழக்கும் பதிந்து உள்ளனர். இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்து உள்ளது . நியாயம் கேட்க வந்த பெண்ணின் குடும்பத்தையே இவர் போலீசில் மாட்டிவிட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போக நியாயம் கேட்ட பல பெண்களின் குடும்பத்தினரை வீடியோவையோ வெளியிடுவேன் என்று கூறியும் இவர் மிரட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+