நாகர்கோவில் அருகே தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகள்.. சிக்கியது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தையை மகளே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு நாடகமாடியது பிரேத பரிசோதனையில் அம்பலமாகி உள்ளது. எதற்காக அப்படி செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்த 46 வயதாகும் சுரேஷ்குமார் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். சுரேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமாரை விட்டு அவருடைய மனைவி பிரிந்துவிட்டார். கையோடு தனது இளைய மகளையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்

இதனிடையே மூத்த மகளான 21 வயதாகும் ஆர்த்தி மட்டும் தனது தந்தையான சுரேஷ்குமாருடன் தங்கினார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் அதிகமாக மது குடித்து விட்டு இறந்து கிடப்பதாக இளம் பெண் ஆர்த்தி, பூதப்பாண்டி போலீசாருக்கு அழைத்து தெரிவித்தார்.
உடனே கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து சுரேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த போது தலையில் காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் முடிவு செய்தனர். முதலில் போலீசாருக்கு சுரேஷ்குமார் மகள் ஆர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த கோணத்தில் விசாரித்த போது ஆர்த்தி தான் தந்தையை கொன்று விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. ஆரம்ப கட்ட விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவலை ஆர்த்தி தெரிவித்ததார். இறுதியாக தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் தந்தையை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக ஆர்த்தி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்த தகவலை போலீசார் கூறுகையில், ஆர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் தாயார் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். ஆனாலும் தனது தந்தையுடன் ஆர்த்தி வசித்து வந்துள்ளார். மதுகுடித்து விட்டால் அவரது தந்தை சகட்டுமேனிக்கு தகாத வார்த்தைகளை பேசுவாராம்.
அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று அதே மாதிரி ஆர்த்தியிடம் பேசியதுடன் தாக்கவும் முயன்றாராம். இதனால் ஆத்திரத்தில் அவரை தள்ளி விட்ட ஆர்த்தி, அங்கு கிடந்த கட்டையால் தலையில் தாக்கி உள்ளார். எனினும் அவர் ஆர்த்தியை திட்டிக்கொண்டே இருந்தாராம். இதனால் அவரை பேச விடாமல் ஆர்த்தி கழுத்தை நெரித்துள்ளார். இதில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்து விட்டாராம். பின்னர் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்க, தந்தை அதிகமாக மது குடித்துவிட்டு இறந்து விட்டதாக நாடகமாடி உள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், போலீசாரின் விசாரணையால் மாட்டிக் கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications