குளச்சல் அருகே.. நீதிமன்ற பெண் ஊழியரை கொடூரமாக எரித்து கொல்ல முயன்ற கணவன்!.. பதைபதைக்கும் வீடியோ!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி, கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே நடுவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபாய் (40). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை. ஹெப்ஸிபாயை அவரது கணவர் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்துள்ளார்.

கொலை முயற்சி
கொலை முயற்சி இந்நிலையில் ஹெப்சிபாய்க்கு அரசு பணி கிடைத்தது. அவர் கடந்த 2 - ம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று சுரேஷ்ராஜன், தனது வீட்டின் கதவை பூட்டி வைத்து வீட்டிற்குள் தாலி கட்டிய மனைவியான ஹெப்சிபாயை காலில் அரிவாளால் வெட்டியதோடு நாற்காலியில் கை மற்றும் வாயை கட்டி வைத்து கொலை முயற்சி மேற்கொண்டதோடு கொடூரமாக சித்திரவதை செய்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.

கையும் களவுமாக
இதனால் அவர் அலறவே, அண்டை வீட்டார் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்றபோது ஹெப்சிபாய் காலில் வெட்டு காயத்துடன் நாற்காலியில் கைகளும் வாயும் கட்டப்பட்டிருந்த நிலையில், கொடூரத் சித்ரவதைக்கு உள்ளாகி அழுதுகொண்டிருந்தார்.

சித்ரவதை
அருகில் சுரேஷ்ராஜன் கத்தியுடன் சித்திரவதை செய்து கொண்டிருந்தார். நீதிமன்ற ஊழியரை மீட்ட போலீசார், சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூகவலைதளங்கள்
இச்சம்பவம் தொடர்பாக, ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications