குமரியில் ஷாக்! குளியலறையில் ரகசிய கேமரா.. மிசோரத்திலிருந்து ரசித்த ராணுவ வீரரை தட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் குளிப்பதை ரகசிய கேமரா பயன்படுத்தி 2 ஆண்டுகளாக வீடியோ எடுத்து ரசித்த ராணுவ வீரரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

வீடியோ எடுத்த ராணுவ வீரர் இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

Kanyakumari crime police

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவருடன் வசித்து வரும் இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு இவர் புதியதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். புதுமனை புகுவிழாவுக்கு தனது உறவினர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறார். இதில் பங்கேற்ற உறவினர்களில், 35 வயது மதிக்கத்தக்க மதுராஜா என்பவரும் ஒருவர்.

இவர் இந்திய ராணுவத்தின் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் இவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினரிடம் இவருக்கு பழக்கம் இருந்திருக்கிறது.

இப்படி இருக்கையில் புதுமனை புகுவிழாவுக்கு வந்த இவர், புது வீட்டின் பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தியிருக்கிறார். பின்னர் அவர் மிசோரமுக்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கிருந்து சுமார் 2 ஆண்டுகளாக குளியலறையில் இளம்பெண் குளிப்பதை ரகசியமாக கண்டு ரசித்திருக்கிறார். ஆனால் அது அவருக்கு போதாமையாக இருந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்த அவர், குளியலறை காட்சிகளை காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அப்பெண் இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் நிர்வாண வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனாலும் அப்பெண் உறுதியுடன் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராணுவ வீரர் மதுராஜா, நிர்வாண வீடியோக்களை அவரது நண்பர்களிடம் காண்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ராணுவ வீரர் ஒருவர், குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இரண்டு ஆண்டுகளாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்திருக்கும் சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+