மிரட்டும் திமுக மேயர்.. இடையூறு செய்தால் இதுதான் நடக்கும்.. காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!
அரசு செவிசாய்க்கவில்லை என்றால் கன்னியாகுமரி மாவட்ட ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் போரட்டத்தில் இறங்கும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி : திமுக மேயர் மகேஷ் மண்டைக்காடு சமய மாநாடு சம்பந்தமாக இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுவதாகக் கூறிக்கொண்டு வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜை மிரட்டுவது போன்று அறிக்கை கொடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், வரும் மார்ச் 5-ஆம் தேதி மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 86வது இந்து சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கம் நடத்த ஏற்பாடுகளைச் செய்தது.
இந்நிலையில், இந்த இந்து சமய மாநாட்டை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

காடேஸ்வரா சுப்பிரமணியம்
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சமய வகுப்பு, திருவிளக்கு பூஜை மூலம் மிகபெரும் ஆன்மீக சேவைகளைச் செய்து வருபவர் இந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ். சுமார் 85 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்து வருகிற இந்து சமய மாநாட்டினை எதிர்த்து ஆளும் திமுக கட்சியின் அமைச்சரும், கட்சியினரும் கடந்த சில தினங்களாக திட்டமிட்ட ரீதியில் செய்து வருகின்ற இடையூறுகளைக் கண்டித்து சுவாமிஜி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்தார்.

மிரட்டிய மேயர்
அவரது பேட்டி ஒட்டுமொத்த குமரி வாழ் இந்து மக்களின் மனவெளிப்பாடு. இந்நிலையில் திடீர் இந்து ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் திமுக மேயர் மகேஷ் மண்டைக்காடு சமய மாநாடு சம்பந்தமாக இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுவதாகக் கூறிக்கொண்டு வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் அவர்களை மிரட்டுவது போன்று அறிக்கை கொடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மிகப்பெரிய சதி
இவர்கள் இந்து மதத்தையும், திமுக அரசையும், திமுக அமைச்சரையும் விமர்சித்து கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய போது எதிர்த்து அறிக்கை விட்டார்களா? இவர்கள் நோக்கம் இந்து மதத்தை குறிவைத்து தாக்குவதுதான். உண்மையிலேயே இவருக்கு இந்துமதப் பற்று இருந்திருந்தால் பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற இந்து சமய மாநாட்டிற்கு இடையூறாக இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகளாக சமயப் பெரியோர்கள் நடத்தி வந்த மாநாட்டை அரசு நடத்தும் என்று கூறும் திடீர் இந்துப் பற்றாளர்களான திமுகவினர் தாங்களே நடத்துவதாகக் கூறுவது என்பது மிகப்பெரும் சதியின் பின்னணி என்றே மக்கள் எண்ணுகிறார்கள்.

உண்டியல் பணத்தை எடுத்து
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு கடைகள் அமைக்க கிறிஸ்தவ சர்ச் தரை வாடகை வசூலிப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன்? திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேமானது பக்தர்களின் பங்களிப்பு மூலம் தான் நடத்தப்பட்டதே தவிர திமுக அரசு அதற்கு எந்த விதமான செலவுகளையும் செய்யவில்லை. ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக அதில் விளம்பரத்தை தேடிக்கொண்டது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இந்துக்கள் செலுத்தும் உண்டியல் பணத்தை எடுத்து தான் அரசு கோயில்களுக்கு செலவு செய்கிறதே தவிர அரசு எந்த வித செலவுகளையும் செய்வதில்லை என்பதை மக்களுக்குத் தெரியும்.

அறநிலையத்துறை வேலை இதுதான்
பக்தர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டு கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு அதற்கும் செலவு கணக்கு எழுதும் வேலையைத்தான் அறநிலையத்துறையும், அரசும் செய்து வருகிறது. அறநிலையத்துறை என்பது கோயில் வரவு, செலவு கணக்குகளை பார்ப்பதற்கு தானே தவிர கோயில் நிகழ்ச்சிகளில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெறும் இந்து சமய மாநாடு வழக்கம்போல் நடைபெற வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் விளக்கேற்றி அம்மனிடம் பிரார்த்தனை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டுபிரார்த்தனைக்கு இந்து முன்னணி தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது.

எச்சரிக்கை
இந்த ஆன்மீக போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் கன்னியாகுமரி மாவட்ட ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கும். எனவே, தமிழ்நாடு முதல்வர் கன்னியாகுமரி மாவட்ட இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெறும் இந்து சமய மாநாட்டை கடந்த காலங்களை போன்று நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications