கன்னியாகுமரியில் "அது" கிட்டயே படுத்துக்கிட்ட டிரைவர்.. ஏதோ மூக்கில் உறிஞ்சி.. ஆடிப்போன நாகர்கோவில்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: "மது அருந்துவதைவிட, அந்த போதை பொருளை பயன்படுத்தும் போதெல்லாம், கொடூரமாக மாறிவிடுவார்.. அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.. அந்த நேரத்தில் ஆத்திரத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது" என்று கொலையாளியின் மனைவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ளது பத்துகாணி பள்ளித்தரவிளை.. இங்கு வசித்து வருபவர் ரசல்.. 67 வயதான இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவரது மகன் மெஜோ, லாரி டிரைவராக உள்ளார்.. 34 வயதாகிறது.

kanniyakumari nagarcoil arumanai

மெஜோவின் மனைவி பெயர் சோபி.. இவர்களுக்கு இரண்டரை மற்றும் 6 மாத வயதில் குழந்தைகள் உள்ளனர்... அப்பாவுக்கும், மகனுக்கும் குடிப்பழக்கம் உள்ளது.. எப்போதுமே 2பேரும் சேர்ந்துதான் தண்ணி அடிப்பார்களாம்..

தலைக்கேறிய போதை: 2 நாட்களுக்கு முன்புகூட இருவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. அப்போது மதுபானம் தீர்ந்துவிட்டது. இதனால், மெஜோ மறுபடியும் டாஸ்மாக்குக்கு சென்று சென்று மது வாங்க போனார்.. ஆனால், அதற்குள் போதை அதிகமாகவிட்டதால் ரசல் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டுதூங்கி விட்டடார்.

இதனிடையே மது பாட்டிலுடன் வீட்டுக்கு வந்து மெஜோ கதவை தட்டியுள்ளார்.. ஆனால், வெகுநேரமாக ரசல் கதவை திறக்காததால், ஆத்திரமடைந்த மெஜோ, காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் சென்ற, தூங்கி கொண்டிருந்த தந்தையை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டார். பிறகு, அந்த சடலத்தின் பக்கத்திலேயே போதையில் படுத்து தூங்கிவிட்டார். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், மெஜோவை கைது செய்து சிறையில் அடைத்து, இது தொடர்பான விசாரணையையும் துவங்கினர்.

அப்போது மெஜோவின் மனைவி சோபி போலீசில் சொன்னதாவது: 'என் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்... தினமும் தண்ணி அடித்துவிட்டு வருவதுடன், கையில் எதையோ கசக்கி விட்டு அதனை உறிஞ்சிக் கொண்டேயிருப்பார்.. தினந்தோறும் போதை ஏற்றும் பழக்கத்தை கொண்டவர்.

சின்ன பிரச்சனை: மது அருந்துவதைவிட, அந்த போதை பொருளை பயன்படுத்தும் போதெல்லாம், கொடூரமாக மாறிவிடுவார்.. அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.. அந்த நேரத்தில் ஆத்திரத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. சின்ன பிரச்சனை என்றாலும், மிக மோசமாக தாக்குவார்.. யாராக இருந்தாலும் அடித்து உதைத்துவிடுவார்.. ஆபாசமாக திட்டுவார்.

ஆனால் போதை தெளிந்துவிட்டால், தலைகீழாக மாறிவிடுவார்.. சாந்தமான மனநிலைமையில், மிகவும் அமைதியாகவும், மென்மையாகவும், நல்லவராகவும் மாறிவிடுவார்.. எப்ப பார்த்தாலும் அவருக்கு செல்போனில் வீடியோ கால் வரும்.. இவரும் பதிலுக்கு பணம் செலுத்தி அடிக்கடி யாரிடமோ வீடியோ காலில் பேசுவார்... அது யார் என்று கேட்டால் சொல்லவும் மாட்டார். வற்புறுத்தி கேட்டால் என்னை அடிக்க வருவார் என்று கூறியிருக்கிறார்.

விசாரணை: இதையடுத்து, சோபியின் இந்த வாக்குமூலத்தை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையில் அருமனை போலீசார் இறங்கி உள்ளனர்.. மெஜோ தன்னுடைய கையில் கசக்கி உறிஞ்சும் அந்த போதைப்பொருள் என்ன? வீடியோ காலில் ரகசியமாக யாரிடம் பேசிவந்தார்? என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+