ரொம்ப ஸாரி..ம்மா.. அவரை ஒன்னும் சொல்லிடாதீங்க.. யாரிந்த பரிதாப பெண்.. கன்னியாகுமரியை உலுக்கிய குரல்
கன்னியாகுமரி: திருமணமான 6 மாதத்தில் மாமியார் கொடுமையால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை கன்னியாகுமரியில் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை தந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது..

ஸ்ருதி திருமணம் : இந்நிலையில் ஸ்ருதி, நேற்றுமுன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ஸ்ருதி தன்னுடைய அம்மாவுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் "ரொம்ப சாரிம்மா.. தயவு செய்து அவரை எதுவுமே சொல்லாதீங்க. மறுபடியும் என் மாமியார் என்னை வீட்டை விட்டு போகச்சொல்லிட்டாங்க.. அப்பா வீட்டுல கொண்டு போய் விடுவதாக சொன்னாங்க. எங்க வீட்ல கொண்டு விட்டால் நான் செத்துப் போவேன்னு சொன்னேன். அவங்க பிடிச்சபிடியா இருக்காங்க. நான் செத்தால் என் பிள்ளைக்கு வேறு யாரும் இல்லை.
வாழாவெட்டி: உனக்கு வேறு குடும்பம் இருக்குதாம்.. இதை என் மாமியார் சொன்னாங்க. என்னை கொண்டுபோய் என் வீட்டில் விட்டுவிடுன்னு சொன்னாங்க.. வாழாவெட்டியாக இருப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை.
எனக்கும் (கணவருக்கும்) இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் ஆனதில்லை. இவங்களாலதான் பிரச்னை. என் புருஷன் பக்கத்தில நான் உட்காரக்கூடாது. பக்கத்தில உக்காந்து சாப்பிடக்கூடாது. எச்சில் தட்டை எடுத்து சாப்பிடணுமாம். வாழாவெட்டியாக வீட்டில் உட்கார விருப்பம் இல்லை, அதனால்தான் இந்த முடிவு" என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அழுதுபடியே சொல்லியிருந்தார்.
ஆடியோ மெசேஜ்: இந்த ஆடியோவை தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதற்கு பிறகு ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த வாட்ஸ்அப் ஆடியோவை சுருதி பெற்றோர் கேட்டுவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக மகளை பார்த்து ஆறுதல் சொல்லி, தங்களுடனே வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று முடிவு செய்து பெற்றோர் இருவரும், கோவையில் இருந்து கிளம்பி சுசீந்திரம் வந்திருக்கிறார்கள்.
கதறல்: அப்போது கார்த்திக்கின் உறவினர் லட்சுமி என்பவர், சுருதியின் பெற்றோருக்கு போன் செய்து, ஸ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, மகளின் சடலத்தை கண்டு பெற்றோர் இருவரும் விழுந்து புரண்டு கதறி அழுதது காண்போரையே நிலைகுலைய வைத்துவிட்டது.
பின்னர், தன்னுடைய மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஸ்ருதியின் அப்பா, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ஆர்டிஓ காளீஸ்வரியும் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளார்.
மேட்ரிமோனியல்: மின் வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வரும் கணவர் கார்த்திக், மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் தேடி வந்திருக்கிறார்.. அப்போதுதான் ஸ்ருதியின் போட்டோவை அதில் பார்த்ததுமே பிடித்துப்போயிருக்கிறது. ஸ்ருதியின் அப்பா பாபுவும், மின்வாரிய மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறாராம்.
இந்த திருமணத்தின்போது 45 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக தந்திருக்கிறார்கள்.. ஆனால், 3 மாதம் மட்டுமே சந்தோஷமாக ஸ்ருதி வாழ்ந்ததாக தெரிகிறது.. உடனே மாமியார் செண்பகவல்லி சுருதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த துவங்கியிருக்கிறார்.. தாலி கட்டிய கணவரிடம்கூட பேச அனுமதி கிடைக்காத நிலையில், நாளுக்கு நாள் இந்த கொடுமைகளை தாங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பரபரப்பு: அளவுக்கு அதிகமான மாமியார் டார்ச்சரே, ஸ்ருதியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும்வரை கொண்டுசென்றதாக தெரிகிறது. ஸ்ருதியின் சடலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட உள்ளது.. இறுதிச்சடங்கு ஸ்ருதி கேட்டுக்கொண்டபடியே நடக்கும் என தெரிகிறது. இந்த துயர சம்பவம் கன்னியாகுமரி, கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
"என்னை கோயம்புத்தூருக்கு எடுத்து சென்றுவிடுங்கள், அல்லது இங்கேயே இறுதி சடங்கு நடத்திவிடுங்கள். மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்துவிட்டால் போதும்... இவர்கள் கட்டுப்பாட்டுப்படி ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று ஸ்ருதி அந்த ஆடியோவில் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications