"காலு".. கோபால் வீட்டு மாமரத்துல, அந்த "காக்கா" கத்திட்டே இருந்துச்சாமே.. அடடே, இதுவல்லவோ "சம்பவம்"
கன்னியாகுமரி: நாகர்கோயிலில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஒரு காக்கா ரொம்ப நேரமாக கத்திக்கொண்டே இருந்ததாம்? ஏன்?
சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடும்போது, எதிர்பாராத விதமாக, எத்தனையோ பேர் அந்த நூலில் சிக்கி கொள்கிறார்கள்.. குறிப்பாக, மாஞ்சா நூல் பறித்த அப்பாவி உயிர்கள் ஏராளம்.. கொடூரமும், அநியாயமும்கூட.
சிலசமயம், இந்த நூல்களில் பறவைகளும் சிக்கி கொள்கின்றன.. நம் கண்ணெதிரே வாயில்லா ஜீவன்கள் படபடத்து, நூலில் சிக்கி தவிக்கும்போது, மனசு கேட்பதில்லை..

அப்பார்ட்மென்ட்: இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு குருகிராம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது.. மதியம் 12 மணி இருக்கும்.. அது ஒரு அப்பார்ட்மென்ட்... அங்கே மரங்கள் நிறைந்த பூங்கா பகுதியில், சிறுவர்கள் சிலர் பட்டம் விட்டு கொண்டிருந்தார்கள்.. அந்த பட்டம், ஒரு பறவையின் கழுத்தில் சிக்கி கொண்டது.. பூங்காவின் முன்புறம் உள்ள உயரமான மரத்தின் கிளைகளில், அந்த பறவை தலைகீழாக தொங்குவதையும் பார்த்தனர். அதற்கு மூச்சு திணறி கொண்டிருந்தது.
அரைமணி நேரம்: இதைபார்த்து அந்த சிறுவர்கள் கத்தி கூச்சலிடவும், அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்புப் பணிக்கு தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து, பறவையை மீட்டனர்.. இதற்கே அரை மணி நேரமாகிவிட்டது.. பறவை மிகவும் இறுக்கமாக சிக்கிக்கொண்டிருந்தது..
இப்படித்தான் நம்ம ஊரிலும் இன்று நடந்துள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள வாத்தியார்பிள்ளை பகுதியில் வசிப்பவர் கோபாலன்.. இவரது வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மாமரம் உள்ளது.. அந்த மாமரத்தில் காக்கா ஒன்று ஓயாமல் கரைந்துகொண்டே இருந்தது.. அந்த சத்தத்தை கேட்டு, கொஞ்ச நேரத்திற்கெல்லாம், மற்ற காக்கைகளும் ஒன்று திரண்டு வந்துவிட்டன..
நைலான் கயிறு: கூடி வாழும் பழக்கம் கொண்ட காகங்கள், இந்த விஷத்திலும் ஒற்றுமையை விட்டுத்தரவில்லை.. சக தோழனின் வலிநிறைந்த குரலுக்கு ஓடோடி வந்துவிட்டன.. இப்போது மொத்த காக்கைகளும் சேர்ந்து கரைய ஆரம்பித்தன.. அப்போதுதான், அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.. அந்த காக்காவின் கால்களில் கயிறு ஒன்று சுற்றப்பட்டிருப்பதை பார்த்தனர்.. பிறகு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரவும், விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர் ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் ஏறி, அந்த காகத்தை பிடித்தார்... அதன் கால்களில் சுற்றப்பட்டிருந்தது, சிறுவர்கள் பட்டம் விட பயன்படுத்தும் நைலான் கயிறு என்று அப்போது தெரியவந்தது.
சுதந்திர வானம்: அது இறுக்கியதால் பறக்க முடியாமல் காகம் கரைந்துள்ளது.. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர்.. அதற்கு பிறகு, சுதந்திர வானிலே, சக தோழமைகளுடன், அந்த காக்கா பறந்து போயிடுச்சாம்...!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications