கன்னியாகுமரி: குமரி முனையில் முதல் முறையாக உதயமாகுமா அதிமுகவின் இரட்டை இலை?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் முதல் முறையாக அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் என போராடுகிறது அந்த கட்சி.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு,
கிள்ளியூர்.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 15,47,378; ஆண்கள்- 7,72,623; பெண்கள்- 7,74,619; 3-ம் பாலினத்தவர்- 136
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
ஹெலன் டேவிட்சன்(திமுக) 3,20,161
பொன். இராதாகிருஷ்ணன்(பாஜக) 2,54,474
பெல்லார்மின்(சிபிஎம்) 85,583
ஆஸ்டின்(தேமுதிக) 68,472
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பொன். இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,72,906
எச். வசந்தகுமார்(காங்கிரஸ்) 2,44,244
டி. ஜான்தங்கம்(அதிமுக) 1,76,239
எப். எம். இராஜரத்தினம்(திமுக) 1,17,933
ஏ. வி. பெல்லார்மின் (சிபிஎம்) 35,284
சு. ப. உதயகுமார்(எளிய மக்கள் கட்சி) 15,314
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
வசந்தகுமார்(காங்கிரஸ்) 6,27,235
பொன். இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,67,302
ஜெய்தீன்(நாம் தமிழர் கட்சி) 17,069
இ. இலக்ஷ்மன்(அமமுக) 12,345
எபினேசர் (மக்கள் நீதி மய்யம்) 8,590
2024-ம் ஆண்டு களத்தில் நிற்பவர்கள்
விஜய் வசந்த் (காங்கிரஸ்)
பசிலியன் நசரேத் (அதிமுக)
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)
மரிய ஜெனிபர் (நாம் தமிழர் கட்சி)
கன்னியாகுமரி தொகுதி கள நிலவரம் என்ன?- இத்தொகுதியில் காங்கிரஸ் 8 முறை வென்றுள்ளது. பாஜக 2 முறை வென்றுள்ளது. திமுக, சிபிஎம் ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக இதுவரை வெற்றி பெற்றதே இல்லை என்பது சரித்திரம். காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிதான். அதேநேரத்தில் திமுக, இடதுசாரிகள், அதிமுகவுக்கும் கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி. பொதுவாக திமுக- அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்க்கிற தொகுதியாக கன்னியாகுமரி இருந்து வருகிறது. இதனால் காங்கிரஸ்- பாஜக நேரடியாக மோதக் கூடிய களமாக கன்னியாகுமரி இருப்பது வழக்கம். இம்முறை காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை முட்டி மோதுகின்றன. இந்த கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி வலுவாகவே இருக்கிறது. பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நேரடியாக களம் இறங்குவதால் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications