நாகர்கோவில் "ஜாலி ஜாலி".. பங்களா மொட்டை மாடிக்கு போன போலீஸ்.. அந்த காட்சி.. கிறுகிறுத்த கன்னியாகுமரி
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, கன்னியாகுமரியே ஆச்சரியப்பட்டு போயுள்ளது.. அப்படியென்ன நடந்தது?
நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் வெளிநாட்டிலேயே இருக்கிறார்.
பிரமாண்டம்: இவருக்கு சொந்தமான வீடு, பள்ளிவிளை பகுதியில் உள்ளது.. வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், இந்த வீட்டினை, காஸ்ட்லியாக கட்டியிருக்கிறார்.. சொந்த ஊருக்கு வரும்போது மட்டும், தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் வந்து இன்ஜினியர் தங்குவாராம். மற்ற நாளில் பூட்டப்பட்டே கிடக்கும்.

இந்நிலையில், திடீரென நேற்று நள்ளிரவில் இந்த வீட்டின் மாடி கதவு திறந்து கிடந்தது.. உள்ளே லைட் எரிந்துள்ளது.. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், என்ஜினியர் வெளிநாட்டில் இருக்கும்போது, மொட்டை மாடியில் யாரோ வந்திருக்கிறார்களே என்று நினைத்து, வடசேரி போலீசுக்கு தகவல் தந்துள்ளனர். போலீசாரும் உடனடியாக இந்த பங்களா வீட்டுக்கு வந்தனர்..
மர்மநபர்: அப்போது மாடியில் யாரோ ஒரு மர்ம நபர் இருப்பதும், ரூமுக்குள் லைட் எரிவதும், ஃபேன் ஓடுவதும் தெரிந்தது. இதனால், பதறிப்போன போலீசார், மாடிவழியாக ஏறினர். ஆனாலும், எத்தனை பேர் ரூமுக்குள் இருக்கிறார்கள் என்றும் தெரியாமல், வந்திருக்கும் கொள்ளையர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள், வெடிகுண்டு ஏதாவது இருந்துவிட்டால் தாக்குதல் நடந்துவிடுமே என்று யோசித்துள்ளனர்.
எனினும், மாடிக்கு ஜாக்கிரதையாக ஏறி சென்று, அந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனார்கள்.. அங்கே பார்த்தால், அந்த பெட்ரூமில், ஒரு நபர், ஹாயாக தூங்கி கொண்டிருந்தார்.. ஃப்ரிட்ஜ் ஓடிக்கொண்டிருந்தது.. உடனே போலீசார் அவரிடம் சென்று, "தம்பி யார் நீங்க" என்று கேட்டனர். அதற்கு அந்த நபர் போலீசாரை பார்த்து, நீங்கள் எல்லாம் யார்? என்று இங்கிலீஷிலேயே கேட்டார்..
ஆங்கிலப்பேச்சு: உடனே போலீசார், இன்னொருத்தர் வீட்டில் வந்து படுத்திருக்கீங்களே? இது சரியா? என்று கேட்டனர்.. அதற்கு அந்த நபர், "என்னாது, அடுத்தவர் வீடா? என்ன பேசுறீங்க நீங்க? இது என்னுடைய வீடு? என்று மறுபடியும் இங்கிலீஷிலேயே பேசி போலீசாரை அசரடித்தார்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் போலீசார் விழித்தனர்..
பிறகு, அந்த வீட்டின் ஓனரின் சொந்தக்காரர்களுக்கு தகவலை தந்து வரவழைத்தனர்.. வீட்டிற்குள் ஏதாவது, திருட்டு போய் உள்ளதா? என்றும் சொன்னார்கள்.. அந்த சொந்தக்காரரும் வீடு முழுவதும் பார்த்துவிட்டு, எதுவும் திருடு போனது போல தெரியலையே என்றார். இதையடுத்து அந்த நபரிடம், "சரி, ஸ்டேஷன் வரைக்கும் வந்து, இந்த வீடு உங்களுடையதுதான் என்று எழுதி தந்துவிட்டு போய்விடுங்கள்" என்றனர். அதற்கு அந்த நபர், "நான் ஏன்? வரணும்? என்னால் முடியாது" என்றார்.
ஒரே ஒரு க்ளூ: எனினும் தொடர்ந்து அவரிடம் நைசாக பேசி, வெளியே அழைத்து வந்து, பேச்சு தந்தனர்.. அப்போது நாகர்கோவில் ராமன்புதூரில், தனக்கு ஒரு சகோதரர் இருப்பதாக சொல்லி, அந்த போன்நம்பரையும் சொன்னார். இந்த ஒரு க்ளுவை வைத்தே, போலீசார் தங்கள் அதிரடியை காட்டினர்.. அந்த நம்பருக்கு போன் செய்து, சம்பந்தப்பட்ட சகோதரரை வரவழைத்தனர்..
அந்த நபர் யார் என்று சகோதரரிடம் போலீசார் கேட்டார்கள்.. அப்போதுதான் தெரிந்தது, அந்த மர்ம நபர், மனநலம் பாதிக்கப்பட்டவராம்.. எப்போதுமே யார் வீட்டு மாடியிலாவது ஏறி கொள்வாராம்..
பரபரப்பு: ஆளில்லாத அந்த வீடுகளில் உள்ள பொருட்களையும் எடுத்து சென்று விற்று, அதில் தண்ணி அடிப்பாராம்.. அப்படித்தான் இந்த வீட்டுக்கும் வந்துள்ளார்.. ஆனால், இந்த வீட்டிலேயே கடந்த ஒரு வாரமாகவே தங்கியிருக்கிறாராம். அக்கம்பக்கத்தில் நேற்றுதான் இதை கண்டுபிடித்துள்ளனர். இப்போது அந்த நபரை, அவரது சகோதரருடனேயே போலீசார் அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications