கன்னியாகுமரி லாட்ஜில் பச்சை கலர் வாந்தி எடுத்த ஷாரோன்? பிசாசின் சுபாவம் கிரீஷ்மா! கஷாயம் தந்த தூக்கு
கன்னியாகுமரி: ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து, காதலனை கொன்ற விவகாரமாகட்டும், இந்த கொலையை செய்த காதலிக்கு நீதிமன்றம் தந்துள்ள தூக்கு தண்டனையாகட்டும், இரண்டுமே நாட்டு மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. வெறும் 23 வயது பெண்ணுக்கு, இவ்வளவு வன்மமும், கொடூரமான குணமும் இருக்க முடியுமா? என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் யாராலுமே விலக முடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை மூறியன்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜ், என்ற இளைஞர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார்... இவரும், களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கிரீஷ்மா வீட்டிற்கு ஷாரோன் சென்றபோது, விஷம் கலந்த கஷாயம், ஜூஸ் தந்திருக்கிறார் கிரீஷ்மா. இறுதியில் ஷாரோன் உடம்பில் ரத்தத்தில் விஷம் கலந்து, உடல் பாகங்களும் செயலிழந்து ஷாரோன் இறந்துவிட்டார்.

குற்றவாளி: இது தொடர்பாக கிரீஷ்மா கைதாகியிருந்த நிலையில், ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், காதலி கிரிஷ்மா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது.. குற்ற சம்பவத்தின் ஆதாரங்களை அழித்ததாக, கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல் குமாரனும் குற்றவாளி என்று உறுதி செய்து, போதிய ஆதாரங்கள் இல்லாததால் கிரிஷ்மாவின் அம்மாவை வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளி தரப்பில் வாதம் கேட்ட பிறகு, தண்டனை தீர்ப்புக்கான விவரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஷாரோன்ராஜை கொலை செய்த கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.. தாய்மாமாவுக்கு நிர்மலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை: இந்த கொலை சம்பவம் நடந்தபோதும், வழக்கு விசாரணையின்போதும் ஏராளமான தகவல்கள் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டேயிருந்தது.. ஆரம்பத்தில் ஷாரோனை உண்மையிலேயே விரும்பிய கிரீஷ்மா, வீட்டில் தனக்கு பணக்கார இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளதை அறிந்ததுமே மனசு மாறி, ஷாரோனை கழட்டிவிடவும் முடிவு செய்துள்ளார். அதற்காகவே கொலை செய்ய பல்வேறுகட்ட முயற்சிகளை செய்துள்ளார்.
ஆரம்பத்தில் நெருங்கிய பழகிய இந்த ஜோடி, பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது, தன் காதலியை விதவிதமாக போட்டோ எடுத்து, ஷாரோன் செல்போனில் வைத்திருந்தாராம்.. வீட்டில் கல்யாண பேச்சு அடிபட்டதும் போனில் எடுத்த போட்டோக்களை அழிக்குமாறு ஷாரோனிடம் சொன்னதற்கு, அதிர்ச்சியடைந்த அவர், போட்டோவை அழிக்க முடியாது என்பதுடன், காதலையும் கைவிட முடியாது என்றாராம். தன்னுடைய வருங்கால கணவருக்கு போட்டோக்கள் தெரிந்தால் வாழ்க்கை பாழாகிவிடுமே என்று நினைத்துதான், ஷாரோனை கொல்ல முடிவெடுத்தார் கிரீஷ்மா.
கிட்னி பாதிப்பு: "நீ கொடுத்த கஷாயத்தை குடித்ததில் எனக்கு வாயில் புண் வந்துவிட்டது.. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள் என்று ஷாரோன் சொல்லியிருக்கிறார்.. அதற்கு க்ரீஷ்மா, "அப்படியா, வழக்கமாக குடிக்கும் கஷாயத்தைத்தானே உனக்கு தந்தேன்" என்று கேஷூவலாக சொன்னார் கிரீஷ்மா. இந்த ஆடியோவை இணையத்தில் வெளியானதுமே, கிரீஷ்மாவின் வீட்டையே அடித்து நொறுக்க போய்விட்டார்கள் அங்குள்ள பொதுமக்கள்.
மருத்துவமனையில் ஷாரோனுக்கு கிட்னி பாதிக்கப்பட்டதுமே, ரத்தத்தை டெஸ்ட் செய்தபோதுதான், உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது... ஆனால், மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், தன்னுடைய காதலி விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை என்றே சொன்னார்.
ஆடியோ மெசேஜ்: விஷத்தின் வேதனையால் இறந்துகொண்டிருக்கும் வேளையிலும், கிரீஷ்மாவுக்கு மெசேஜ் அனுப்பி, "நீ கவலைப்படாதே.. ஆனால், என்னை மறக்காமல் இரு, அதுவே எனக்கு போதும்" என்று சொல்லி இறுதி விடைபெற்றார் ஷாரோன்.
ஷாரோன்ராஜ் 11 நாள்கள் மருத்துவமனையில் பட்ட வேதனைகள் டாக்டர்களின் வாக்குமூலத்தில் இன்றும் உள்ளது. இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர், "இந்த வழக்கு அபூர்வத்திலும் அபூர்வமானது, கிரீஷ்மா எதற்கும் அஞ்சாதவர். பிசாசின் சுபாவம் கொண்டவர், கருணைக்கு தகுதியற்றவர்.. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்" என்று வாதாடினார்.. அதன்படியே இன்று கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை தீர்ப்பு தரப்பட்டுள்ளது.
துணிச்சல்: 23 வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? எப்படி இவ்வளவு கொடூர மனம் உடையவராக இருப்பார்? என்று பொதுமக்கள் அப்படியே அதிர்ந்து போய் உள்ளனர்.
கருணையின் நிழலாக... அன்பின் அவதாரமாக.. இரக்கத்தின் இன்னொரு பரிமாணமாக, மன்னிப்பின் மறு உருவமாக.. காலம் காலமாக பெண்கள் பார்க்கப்பட்டு வரும் நடைமுறைகள் எல்லாம், இதுபோன்ற "நஞ்சு பெண்களால்" சுக்குநூறாக நொறுங்கி கழண்டு விழுந்து கொண்டிருக்கின்றன..!!!












Click it and Unblock the Notifications