அவசரமாக பாத்ரூம் போகணும் சார்.. 23 வயசு பெண் கெஞ்சியதுமே கன்னியாகுமரி வக்கீல் தந்த பதில்! நடந்ததென்ன
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வக்கீல் வீட்டில் நகைகளை திருடிய 23 வயது பெண் போலீசில் சிக்கி கைதாகி உள்ளார். இந்த பெண் தவெக உறுப்பினர் என்று சொல்லப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் மறுப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகி தந்துள்ள விளக்கம் என்ன தெரியுமா? நாகர்கோயில் வழக்கறிஞர் வீட்டுக்கு இளம்பெண் ஏன் சென்றார்? எப்படி போலீசில் சிக்கினார் என்பது குறித்தெல்லாம் கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன..
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகிலுள்ள பழவிளை பகுதியை சேர்ந்த 28 வயது விஜயகுமார், நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

யாரிந்த அர்ஷிதா
அதேபோல, விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியை சேர்ந்த அர்ஷிதா டிப்னி என்ற 23 வயது பெண், திண்டிவனத்தில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். பயிற்சிக்காக நாகர்கோவில் கோர்ட்டுக்கு வரும்போது, விஜயகுமாருக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
கடந்த 12.7.2025 அன்று, விஜயகுமாருக்கு வீட்டிற்கு அர்ஷிதா சென்றபோது, அவர் வீட்டிலிருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார்.. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் தரவும், புகாரின்பேரில் போலீசாரும் அர்ஷிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.. நகைகளை திருடியதை அர்ஷிதா ஒப்புக் கொண்டதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

அவசரமாக பாத்ரூம் போக வேண்டும
இந்நிலையில் அர்ஷிதா ஏன் விஜயகுமார் வீட்டுக்கு சென்றார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.. சம்பவத்தன்று விஜயகுமார் வீட்டில் இருந்தபோது, அர்ஷிதா டிப்னி திடீரென போன் செய்து பேசியிருக்கிறார்..
அப்போது, சார் உங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில்தான் நிற்கிறேன், எனக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மேலும் உடனடியாக பாத்ரூம் போக வேண்டும், புது இடத்தில் வந்திருப்பதால், எங்கே போவது என்று தெரியவில்லை என்றாராம்.
இதனை நம்பிய விஜயகுமார், இளம்பெண் பாத்ரூம் செல்ல வழியின்றி நடுரோட்டில் நிற்பதால் பரிதாபப்பட்டுள்ளார்.. உடனே அட்ரஸை சொல்லி, அர்ஷிதாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படியும் அழைத்துள்ளார்.. சிறிது நேரத்தில் அர்ஷிதா வந்ததுமே, அவரை கழிவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டுக்கு வெளியே நின்று தன்னுடைய நண்பருடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார் விஜயகுமார்.
சந்தேகமே வரவில்லை
10 நிமிடம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்த அர்ஷிதா, விஜயகுமாரிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.. விஜயகுமாரும் உடனே கிளம்பி அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.
ஆனால், 2 நாட்களுக்கு பிறகுதான், தன்னுடைய அம்மாவின் அறையிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.. நகை, கம்மல், மோதிரம் உள்பட 11.25 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.. அர்ஷிதா வீட்டுக்கு வந்து சென்ற பிறகு, வேறு யாருமே வீட்டுக்கு வரவில்லை என்பதால், அர்ஷிதா மீது விஜயகுமாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
விரைவில் அர்ஷிதாவிடம் விசாரணை
உடனே அர்ஷிதாவுக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டுள்ளார்.. ஆனால், அர்ஷிதா விஜயகுமார் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லவில்லையாம்..
இதற்கு பிறகே விஜயகுமார் போலீசுக்கு சென்றுள்ளார்.. புகாரை பெற்று கொண்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராமர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது அர்ஷிதாவை பிடித்து விசாரித்ததில், நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.. இப்போது நகையை அவரிடமிருந்து போலீசார் மீட்டுவிட்டனர்.. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்ஷிதா டிப்னியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகி தந்த விளக்கம்
அர்ஷிதா தவெக நிர்வாகி என்று சொல்லப்பட்ட நிலையில், அக்கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் சபின் அதனை மறுத்துள்ளார்.. அர்ஷிதா தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் எந்த பதவியிலும் பதவியும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக பதவியேற்ற சபினுக்கு வாழ்த்து தெரிவித்து அர்ஷிதா டிபானி அடித்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் வெளியானது.
ஒரே ஒருமுறை போட்டோ
இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் சபின் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "அர்ஷிதா 10 வழக்கறிஞர்களுடன் கட்சியில் இணைவதாக எங்களிடம் சொன்னார்.. அப்போது எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியதால் வாழ்த்து போஸ்டரில் அந்த ஊராட்சியை சேர்ந்தவர்கள் அர்ஷிதாவின் போட்டோவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகு அவர் எங்களது கட்சியில் இணையவில்லை" என்று விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications