கன்னியாகுமரி அரசு ஊழியர் வளர்மதி.. பத்மநாபபுரம் நகராட்சியில் பல லட்சங்கள் மாயம்.. சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த வளர்மதி 2022-ம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அவரிடம் காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நகராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, வரிவசூல் மையத்தில் பணம் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர் மொத்தம் 12.50 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வளர்மதி, இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து மனைவி வளர்மதி கருணை அடிப்படையில் 2022-ம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வளர்மதி 2023-2024-ம் நிதி ஆண்டில் நகராட்சி கணினி வசூல் மையத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் தினசரி வசூலாகும் பணத்தை நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதி பணத்தை கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நகராட்சி வரி வசூல்
இந்தநிலையில் கடந்த ஆண்டு நகராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வரிவசூல் மையத்தில் பணம் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து முதல்கட்டமாக கடந்த நவம்பர் மாதம் வளர்மதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
12.63 லட்சம் கையாடல்
தொடர்ந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 395 -யை வளர்மதி கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதுகுறித்து பத்மநாபபுரம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் நேற்று தக்கலை போலீசில் வளர்மதி மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வளர்மதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பதமநாபபுரம் நகராட்சியில் ரூ.12½ லட்சம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications