கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மூட ஆட்சியர் திடீர் உத்தரவு! ஏன் என்னாச்சு?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை மூட அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக் கடல் நிகழ்வு எச்சரிக்கை காரணமாக குமரி கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. லெமூர் கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூடப்படும். கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டும். இவ்வாறு மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருக்கும் கடல் எந்த வித காற்று, புயல் , சுழல் இல்லாமல் திடீரென கொந்தளிப்பதுதான் கள்ளக் கடல் பாதிப்பு என்கிறோம்.
அதாவது சற்று விரிவாக சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.
எச்சரிக்கையின்படி கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும் ராமநாதபுரத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொருத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications