கன்னியாகுமரி காதலிக்கு கழுத்து நிறைய தங்கம்.. நிறைவேறிய என்ஜினியரின் ஆசை.. எதிர்பாராத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று காதலன் கூறுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். காதலிக்காக வீடு கட்டுவது, தங்க நகை வாங்கி தருவது, காதலிக்காக அரசு சொத்துக்களை ஆட்டையை போட்டு மிகப்பெரிய பங்களா வாங்கி சொகுசாக வாழ்ந்தவர்களின் கதையை கூட கேட்டிருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காதலிக்காக நண்பரின் தாயாரிடமே தங்க நகை பறித்துள்ளார் என்ஜினியர்.. எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்த 29 வயதாகும் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் ஆனந்த் என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்துள்ளார்.

Kanyakumari Engineer arrested for stealing gold jewellery for girlfriend near Thakkalai

அப்போது அவருடன் ஆனந்துக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசரின் தாயார் ரெஜி (63) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருக்கிறது. அவருக்கு நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தங்க நகைகள் காணவில்லை

இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று மாலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருடைய தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணத்தை கேட்ட போது, கழிவறையில் தான் திடீரென மயங்கியதாகவும், பிறகு கண் விழித்த போது தான் அணிந்திருந்த நகை, கம்மல் உள்பட 11 பவுன் நகையை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

உடனே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில், ஒரு வாலிபர் வந்து செல்வது பதிவாகியிருந்தது. மேலும் அந்த வாலிபர், ஆனந்த் என்பதுதான் என்று தெரியவந்தது. நண்பனாக நடித்து தனது தாயாரிடமே நகையை பறித்து விட்டானே என ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் ஆடிப்போனார்.

நகை திருடினார்

இதையடுத்து போலீசார் ஆனந்தை நேற்று உண்ணாமலைகடையில் வைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரரித்தனர். இதில், நகை திருடியதை ஆனந்த் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பற்றி பார்ப்போம். ஆனந்த் பி.இ. படித்து விட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டு வேலைக்கு சென்றபோது அவரது தாயாரின் நிலையை பார்த்து ஆனந்த் உதவி செய்துள்ளார்.

காதலிக்கு தங்கம்

இதற்கிடையே ஆனந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனந்த். ஆனால் போதுமான பணம் இல்லை. இந்தநிலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டிற்கு சென்றபோது அவரது தாயார் கழிவறையில் மயங்கி கிடந்துள்ளார். மேலும் நகை, கம்மல் அணிந்திருந்தார். இதனை பார்த்ததும் எனது எண்ணம் தவறான பாதைக்கு மாறியிருக்கிறது.

காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா

அந்த நகையை பறித்து காதலிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி 11 பவுன் நகையை பறித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+