கன்னியாகுமரியில் பூட்டிய வீட்டில் காதலனுடன் தனிமையில் மகள்.. எந்த தந்தையும் செய்ய துணியாத காரியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பூட்டிய வீட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மகளையும், அவரது காதலனையும், பெண்ணின் தந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார். பெண்ணின் தந்தை ஒரு கொத்தனார் ஆவார். அவரது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. அந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். தந்தை வெளியூர் சென்ற நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தந்தை வந்ததால் இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
பருவ வயதில் சில குழந்தைகள் தவறான வழிகளை தேடுகிறார்கள். காதல் என்ற பெயரில் பருவ வயதை எட்டாத பெண்கள், வழிதவறிப்போகிறார்கள். சிலர் திருமணம் செய்யப்போகும் காதலன் தானே என்று நினைத்து எல்லை மீறுகிறார்கள். இருவருக்குமே வயது 18க்குள் தான் இருக்கும் என்கிற நிலையில், வாழ்க்கையை பற்றி சரியான புரிதலே இருக்காது. இருவருமே வயது கோளாறில் தவறு செய்கிறார்கள்.

சினிமா பாணி
படிப்பை கூட சரியாக முடிக்காமல் , இதுவே வாழ்க்கை என நினைத்து மொத்தமாக தொலைக்கிறார்கள். வீட்டை விட்டு ஓடிப்போவது, சினிமா பாணியில் 18 வயது பெண்ணுக்கு நிறைவு பெற்ற உடன் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்வது, சில மாதம் எங்காவது போய் கூலி வேலை செய்வது பின்னர், பெற்றோரிடம் பிடிக்கவில்லை என்று ஓடி வருவதை வாழ்க்கை என நினைக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் எதிர்காலம் மொத்தமாக அழிந்து போகும் என்பதை அவர்கள் உணரவில்லை.. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வேலை நிமித்தம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார். மகள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று வசித்து வருகிறார். இதனால் கொத்தனார் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கொத்தனார் தற்போது வேலை நிமித்தம் காரணமாக கேரளா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அடிக்கடி வந்து செல்கிறார்.
காதலனுடன் மகள் தனிமையில்
இந்நிலையில் கொத்தனாரின் மகளும், ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த கொத்தனார் மகளை கண்டித்து வந்தார். ஆனால், மகள் தந்தையின் பேச்சை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கொத்தனார் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது மகள், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் காதல் லீலையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளாராம்.
காதல் லீலைகள்
இதை கண்டு கொத்தனார் மிகவும் கோபம் அடைந்தார். தொடர்ந்து வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மகளின் காதல் லீலைகளை கூறி கலங்கி உள்ளார். அங்கு வந்த பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர். தொடர்ந்து காதலனிடம் விசாரணை நடத்திய போது அவர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளையை சேர்ந்தவர் என்பதும் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் குளச்சல் துறைமுகத்தில் வேலைக்கு சென்று வந்தார். அதில் கிடைக்கும் பணத்தால் மாணவிக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வகைகளை வாங்கி கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
ஒப்படைத்த தந்தை
இதையடுத்து இருவரையும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து மாணவனின் செயலை பெற்றோரிடம் கூறி அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications