கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்.. வீடியோவை பாருங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் ஆடிய பெண் ஊழியர்களின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஓணம் பண்டிகையை மருத்துவமனையில் ஆட்டம், பாட்டத்துடன் செவிலியர்கள் கொண்டாடியுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படும் கட்டிடப் பகுதியில் இந்த கொண்டாட்டம் நடந்திருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
ஓணம் பண்டிகை உலகமெங்கும் உள்ள மலையாளிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்படி பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் பராம்பரியத்தையும் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறதோ, சங்கராந்தி எப்படி தெலுங்கு மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறதோ, தசரா எப்படி கன்னட மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறதோ, அதுபோல் கேரளாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் ஓணம் பண்டிகை பறைசாற்றுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது, மகாபலி மன்னர் பாதாள லோகத்திலிருந்து தன் மக்களைப் பார்க்க வருவதாக நம்பப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்கவே மக்கள் தங்கள் வீடுகளைப் பூக்களால் அலங்கரித்து, அறுசுவை உணவுகளைத் தயாரித்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மலையாளிகள் உள்ளனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இந்நிலையில் குழித்துறை அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் ஆடி ஓணம் பண்டிகையை பெண் ஊழியர்கள் கொண்டாடிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனை வெட்டுமணியில் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனையில் அதிக சப்தத்தை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி வைத்து ஓணம் பண்டிகையை ஒட்டி பெண் ஊழியர்கள் குத்தாட்டம் ஆடியிருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படும் கட்டிடப் பகுதியில் இந்த கொண்டாட்டம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது
இதற்கு சமூகவலைத்தளத்தில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிபெருக்கிகள் வைத்து கொண்டாடியது நோயாளிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மருத்துவமனை ஊழியர்களை விமர்சித்து வருகிறார்கள். நோயாளிகளை பாதிக்காத வகையில் வேறொரு இடத்தில் கொண்டாடியிருக்கலாமே என்று கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications