எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ஆன்லைன் லோனில் வட்டி கொள்ளை குறித்து இளைஞர் கண்ணீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என ஆன்லைனில் லோன் எடுத்து சிக்கலுக்கு உள்ளானதை பாடலாக பாடி இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஆன்லைன் பிளேஸ்டோரில் நிறைய கடன் வழங்கும் ஆப்கள் உள்ளன. இவற்றில் உடனடியாக பணம் கிடைப்பதால் நிறைய பேர் இதில் வாங்கி அதிக வட்டியால் திணறி வருகிறார்கள்.

 Kanyakumari man releases crying video about online debt

மேலும் சிலர் கடனை கட்ட தவறினால் கடன் கொடுத்த ஆப் நிறுவனங்களை சேர்ந்த நபர்கள் போன் செய்து ஆபாசமாக பேசி வருவதாகவும் பலர் கூற கேட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஒரு பக்கம் பணவிரயத்தை ஏற்படுத்தியது என்றால் இந்த ஆன்லைன் ஆப்கள் அதிக வட்டியை பறித்து வருகிறார்கள்.

வட்டிக்கு வட்டி, அதற்கு ஒரு வட்டி என ஏழை மக்களை வாட்டி வதைக்கிறார்கள். இதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாமல் பலர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த சுமர் என்ற இளைஞர் ஆன்லைன் லோன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர் வட்டி மீது வட்டி செலுத்தியும் கடன் அடையாத நிலையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். ஆன்லைனில் லோன் எடுப்பவர்கள் எவ்வளவு வட்டி போட்டாலும் செலுத்த முடியும் என்றால் மட்டும் லோன் எடுங்க. அன்றாட கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுவோர் தயவு செய்து ஆன்லைன் செயலியில் லோன் எடுக்காதீர்கள்.

ஆன்லைனில் நான் லோன் எடுத்தேன்
அதிக வட்டியை நான் கொடுத்தேன்
கேட்டதும் லோனை கொடுக்கலையா
என் குரல் வளையை இப்போ நசுக்குறான்யா
அட ஆன்லைன் லோனில் ஓ ஓ
வட்டி ரொம்ப அதிகம் என நினைவிருக்கும் வரை படத்தில் வரும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பாடலின் வரிகளை மாற்றி பாடியுள்ளார்.

இவர் கண்ணீர் மல்க பாடிய பாடல் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+