Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசியாக கொத்தனாருக்கு டாட்டா சொன்ன நர்ஸ் மனைவி.. டக்னு தாலி கட்டிய காதலன்.. கன்னியாகுமரியில் பரபர

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: விடுமுறையில் வருவதாக சொல்லிவிட்டு, டியூட்டிக்கு சென்றிருக்கிறார் இளம் மனைவி.. பிறகு திடீரென மனைவியை காணவில்லை.. இதனால் பதறிப்போன கணவர் போலீசுக்கு ஓடியிருக்கிறார்.. போலீசாரும் சம்பந்தப்பட்ட நபரின் மனைவியை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. இதனிடையே, திருமண வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி ஒட்டுமொத்த கன்னியாகுமரிக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்.. இவருக்கு 26 வயதாகிறது.. கொத்தனார் பணியை மேற்கொண்டு வருகிறார்.. இவரது மனைவி பெயர் அபிஷா.. 22 வயதாகிறது.. குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்தவர் அபிஷா .. இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

Kanyakumari Mason Nurse

திருமணத்துக்கு பிறகு, அஜித்குமார், மாமியார் வீட்டில்தான் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார்.. இதனால், வாரத்துக்கு ஒருநாள்தான் வீட்டுக்கு வந்து போவார். ஆனால், அஜித்குமார், அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவார்.

வார விடுமுறை

கடந்த வாரம் லீவில் வீட்டுக்கு வந்திருந்தார் அபிஷா.. பிறகு 2ம் தேதி டியூட்டிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினார்.. மீண்டும் அடுத்த வாரம் விடுமுறையில் அதாவது, நேற்றுமுன்தினம் 9ம் தேதி வருவதாக கூறி சென்றார். பிறகு கடந்த 6ம் தேதி, மனைவியை பார்க்க அஜித்குமார் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், அபிஷா அங்கு இல்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவரை பார்த்து வருவதாக சொல்லி, பைக்கில் ஒரு இளைஞருடன் அவசர அவசரமாக கிளம்பி போனதாக கூறியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், சொந்தக்காரர் அப்படி யாருமே உடல் நலம் பாதிக்கப்படவில்லையே? என்று குழம்பி போயிருக்கிறார்.. இதனால் பல்வேறு இடங்களில் மனைவியை தேடினார்.

இப்படிப்பட்ட சூழலில், "உன்னுடைய மனைவி இன்னொரு இளைஞரை திருமணம் செய்து கொண்டார்" என்று அஜித்குமாரின் நண்பர் சொல்லி உள்ளார்.. அத்துடன், அந்த திருமண வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளது என்றும் சொல்லி காண்பித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தபோது அஜித்குமாருக்கு தலையே சுற்றியது..


கோயிலில் திருமணம்

அபிஷா, இன்னொரு இளைஞருடன் திருமண கோலத்தில் இருந்தார்... கோயிலில் மாலை மாற்றி தாலி கட்டி தம்பதி இருவரும் திருமணம் செய்ய, உறவினர்கள் அவர்களை சூழ்ந்து வாழ்த்து சொல்வது, வீடியோவில் பதிவாகியிருந்தது.

இதைப்பார்த்து கதறி துடித்தார் அஜித்குமார்.. உடனே அருமனை போலீஸ் ஸ்டேஷனுககு ஓடிச்சென்ற திருமண வீடியோவை காட்டி புகார் தந்தார்.. மருத்துவமனையில் இருந்து தன்னுடைய மனைவியை யாரோ ஏமாற்றி அழைத்து சென்று, இந்த திருமணத்தை செய்து வைத்திருக்கிறார்கள், எப்படியாவது என்னுடைய மனைவியை மீட்டு கொடுங்கள் என்று அழுதுள்ளார்..

இதையடுத்து, அஜித்குமாரின் புகார் குறித்து போலீசார் விசாரணையில் குதித்தனர்.. இன்ஸ்டாகிராம் வீடியோவை வைத்தே, அபிஷாவையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் தேடும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.


விரும்பியே திருமணம்

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "வீடியோவை பார்த்தால் நர்ஸை ஏமாற்றி திருமணம் செய்தது போல் இல்லை. இருவருமே விரும்பியே திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. உறவினர்கள் வாழ்த்துகிறார்கள். அந்த பெண்ணை தேடி வருகிறோம். அவரை பிடித்து விசாரித்தால்தான், இது தொடர்பான முழு விபரங்கள் தெரியவரும் என்றனர்.

அபிஷா, தனக்கு முதல் திருமணம் நடந்ததை மறைத்து 2வது திருமணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அஜித்குமார் புகாரின் பேரில் போலீசார் அபிஷா மாயம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீட்கப்பட்டால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

நர்ஸுக்கு படித்தாரா அபிஷா

இதற்கு நடுவில் அபிஷா குறித்த விவரங்களை போலீசார் ஆராய்ந்தபோதுதான், அவர் வெறும் 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது.. அதுவும் கொரோனா நேரத்திலேயே படிப்பை நிறுத்திவிட்டு, உடனே நர்சாக வேலைக்கு சேர்ந்துவிட்டாராம்.. இவரை எப்படி பணியில் சேர்த்தார்கள்? வேலைக்கு சேரும்போது தந்த சான்றிதழ்கள் என்ன? என்று சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+