கல்லூரி மாணவிக்கு காதலர் தினத்தில் லவ் ப்ரோபோசல்... கிப்ட் கடை ரோமியாவுக்கு மறக்க முடியாத கிஃப்ட்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பஸ்நிலையத்தில் வைத்து தாக்கிய கிஃப்ட் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு காதலர் தினத்தில் காதலை வெளிப்படுத்திய விதத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிஃப்ட் கடை ரோமியாவுக்கு போலீஸ் வாழ்க்கையிலே மறக்க முடியாத அளவிற்கு பரிசு கொடுத்துள்ளனர்.
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பஸ்நிலையத்தில் வைத்து தாக்கிய கிப்ட் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம். இவர் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் சென்று வந்தார்.

ஒரு தலைகாதல்
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் மிடாலம் ஜீவஜோதி நகரை சேர்ந்த 30 வயதாகும் ரிசிபன் என்பவர் கிஃப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அவர் அந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாய் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தன்று தன் காதலை கல்லூரி மாணவியிடம் வெளிப்படுத்த விரும்பியிருக்கிறார் ரிசபன்.

மாணவி அதிர்ச்சி
இதன்படி பிப்ரவரி 14ம் தேதி மாணவி கல்லூரி செல்வதற்காக வழக்கம்போல் குளச்சல் பேருந்து நிலையத்திற்கு சென்றார்.அங்கு பேருந்துக்காக மாணவி காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிசிபன் மாணவியிடம் சென்று 'நீ என்னை காதலிக்க மாட்டியா?' என கேட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மாணவியை ரிசிபன் கன்னத்தில் அறைந்தாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

தப்பி ஓடினார்
மேலும் ரிசிபன் அந்த மாணவி அணிந்திருந்த கல்லூரி சீருடையை கிழித்து மிரட்டல் விடுத்தாக கூறப்பபடுகிறது. இதை சற்றும் எதிர்பாராத மாணவி கதறி அழுதார். இதைகண்டதும் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்திருக்கிறார்கள். அதற்குள் ரிசிபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

கைதான ரிசிபன்
மாணவி அளித்த புகாரை பெற்றுக்கொண்ட குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் அத்துமீறிய ரோமியோ ரிசிபனை கைது செய்தார்கள். .கல்லூரி செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த மாணவியை அடிக்கடி நோட்டமிட்டு வந்த ரிசிபன், காதலர் தினத்தில் காதலை வெளிப்படுத்திய விதத்திற்காக தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். எனவே ஒரு தலையாக காதலிப்பதாக பெண்களை அச்சுறுத்தினால் கடைசியில் போக வேண்டிய இடம் சிறை தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications