கன்னியாகுமரியில் வாயில் பேப்பரை திணித்த தாய்.. பாவம் அந்த குழந்தை.. கணவருடன் ஜாலியா இருக்க இப்படியா?
கன்னியாகுமரி: இந்தியாவில் கள்ளக்காதல்கள் பெருகி வரும்நிலையில், குடும்ப வன்முறைகளும் தலைதூக்கி வருவதை நீதிமன்றங்கள் கவலையுடன் வெளிப்படுத்துகின்றன.. இளம் தம்பதிகளின் விவாகரத்துகளும் அதிகமாகி, அவர்களது குழந்தைகளின் எதிர்காலமும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுவிடுகிறது.. சிலசமயம், கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளை கொல்லும் கொடுமையும் நடந்துவிடுகிறது.. இந்நிலையில், கன்னியாகுமரியில், இளம்பெண் தன்னுடைய சந்தோஷத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூரம் மீண்டும் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கடியப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் ஜான் ரிச்சா்ட். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா்.. இவரது மனைவி சகாய சில்ஜா.. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஜோகின் ரிஷி என்ற குழந்தை உள்ளது..

இந்த குழந்தை கடந்த 2022-ல் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனது. குழந்தையை காணாததால் பதறிப்போன சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகாா் செய்தாா்.
வெள்ளி நகை, அரைஞாண் கொடி
இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மீன்பிடி தொழிலாளியான சகாய சரோபின் என்ற சரோபின் (41), அவரது மனைவி பாத்திமா (35) இருவரும் சேர்ந்து, நகைக்காக குழந்தையை கொன்றது தெரியவந்தது.
குழந்தை அணிந்திருந்த தங்க செயின், பிரேசல்ட், வெள்ளி அரைஞாண் ஆகியவற்றிற்காக குழந்தையை கொன்று பிரோவில் மறைத்து வைத்திருந்தனர்.. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. இதுகுறித்து பத்மநாபபுரம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தண்டனை
இந்த கடந்த ஜூன் மாதம் விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனையும், கொலைக்கான தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக கணவன் சரோபனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்திருந்தார்..
பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற தம்பதிக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்தை அப்போது பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
கன்னியாகுமரி காதல் ஜோடி
இந்நிலையில், தான் பெற்ற குழந்தையையே இளம்தாய் கொன்றிருக்கிறார்.. இதே கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது..
பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள் என்பவருக்கு 20 வயதாகிறது. இவர் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற 21 வயது இளைஞரை காதலித்து வந்தார்..
பெனிட்டாவுக்கு பெண் குழந்தை
கடந்த ஒரு வருடம் முன்பு காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. அதன் பிறகு கார்த்திக், மனைவியின் வீட்டில் தங்கியிருந்து அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே பெனிட்டா ஜெய அன்னாள் கர்ப்பமானார்.. அன்னாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது..
கடந்த 9-ந் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது, குழந்தையை அசையாமல் இருந்திருக்கிறது.. குழந்தை ஏன் அசைவற்று காணப்படுகிறது? என்று மனைவியிடம் கார்த்திக் கேட்டுள்ளார்..
பால் குடித்த குழந்தைக்கு என்னாச்சு
அதற்கு பெனிட்டா, பால் கொடுத்தபோது, குழந்தை தவறி கீழே விழுந்து காயமடைந்துவிட்டது என்று கூலாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், உடனடியாக குழந்தையை கருங்கலில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.. ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து, கார்த்தி கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அத்துடன் உண்மையிலேயே குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணையை துவக்கினார்..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அந்த அறிக்கையை கண்டு அதிர்ந்து போனார்கள் போலீஸ்.. காரணம், குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டது அந்த அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பெனிட்டாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.. அப்போது குழந்தையை கொன்றதை பெற்ற தாய் ஒப்பு கொண்டார்.
கணவரிடம் சந்தோஷம்
போலீசாரிடம் பெனிட்டா சொல்லும்போது, எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகிவிட்டது.. அப்போதிருந்தே என்னுடைய கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்துவிட்டது.. இதனால் எங்களுக்குள் தகராறு வெடித்தது.. எங்களது சந்தோஷத்துக்கு இடையூறாக இருக்க காரணம் குழந்தை தான் என்று ஆத்திரம் வந்தது.. அதனால்தான், சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து, மூச்சை அடக்கி கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்..
இளம்தாய் தந்த இந்த பரபரப்பு வாக்குமூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களை அதிர வைத்து வருகிறது.. கணவரின் சந்தோஷத்துக்கு ஆசைப்பட்ட பெனிட்டா, இப்போது ஜெயிலில் உள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications