கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கன்னியாகுமரி அறிவிப்பு.. களியக்காவிளை எல்லையை மூடியது கேரளா

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியை கேரள அரசு மூடியுள்ளது.

Recommended Video

    இந்தியாவுக்கு வழிகாட்டி... கொரோனாவை கேரளா எதிர்கொண்டது இப்படி தான்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 16 ஆக இருந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக கன்னியாகுமரியும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு அறிவித்தது அதாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய மாவட்டமாக அறிவித்தது.

    கன்னியாகுமரி டூ ராஜஸ்தான் - 2,580 கி.மீ.. டூ வீலர் வாங்கி குடும்பத்துடன் புறப்பட்ட தொழிலாளர்கள் கன்னியாகுமரி டூ ராஜஸ்தான் - 2,580 கி.மீ.. டூ வீலர் வாங்கி குடும்பத்துடன் புறப்பட்ட தொழிலாளர்கள்

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    இதையடுத்து தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியை கேரள அரசு மூடியிருக்கிறது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள அதிகாரிகள் மருத்துவம், வங்கி ஊழியர்கள், காய்கறி, பால், உணவுப் பொருள்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.

    கலெக்டர் பாஸ்க்கு அனுமதியில்லை

    கலெக்டர் பாஸ்க்கு அனுமதியில்லை

    எனினும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறி, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். மற்றபடி எதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாஸ் வாங்கிச் செல்பவர்களுக்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை.

    கொரோனா ஹாட்ஸ்பாட்

    கொரோனா ஹாட்ஸ்பாட்

    இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்க புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை செல்பவர்கள் செல்ல முடியாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். இதுபற்றி வளிக்கம் அளித்த கேரள அமைச்சர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    நடவடிக்கை எடுப்பாரா

    நடவடிக்கை எடுப்பாரா

    விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக மக்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த கேரளாவில் இன்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்புகள் அங்கு தினசரி உள்ளது.

    English summary
    kerala closed the kaliyakkavilai border due to center announced kanniyakumari as coronavirus hotspot
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X