கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபையில் ஆளுநரை பார்த்து கையை நீட்டி ஒருமையில் பேசியது தவறு!அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஆளுநரை மரியாதை குறைவாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு என நடிகையும் பாஜக தேசிய குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் விவேகானந்தரின் 161 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், காதல் வரும் போது மனதில் இருந்து யோசிப்பீர்கள்.

ஏனென்றால் மனதுதான் சரியான முடிவை எடுக்கும். மனதில் இருந்து யோசி அப்போதுதான் முடிவு சரியாக இருக்கும். அதனால்தான் சுவாமி விவேகானந்தர் சொன்னார் வாழ்க்கையில் குழப்பம் வரும் போது மனதில் இருந்து முடிவு எடுங்கள் என்று. காதல் வரும் போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை.

ஆளுநரை பொன்முடி இழிவாக பேசியிருக்கிறார்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. நடிகை குஷ்பு காட்டம்! ஆளுநரை பொன்முடி இழிவாக பேசியிருக்கிறார்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. நடிகை குஷ்பு காட்டம்!

வாழ்க்கையில் வெற்றி

வாழ்க்கையில் வெற்றி

அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். புத்தியை முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள். பெண்களிடம் சில விஷயங்களை சொல்லி வளர்க்கிறோம். ஆனால் ஆண்களிடம் அதை சொல்லி வளர்ப்பது இல்லை. இதை எல்லாம் சுவாமி விவேகானந்தர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். உண்மையை பேசும்படி சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

தவறான சாயம்

தவறான சாயம்

வெளியில் இருந்து இந்துத்துவத்தை தவறான சாயம் பூசுகிறார்கள். பிரதமர் மோடியின் பேச்சிலும் விவேகானந்தர்தான் இருக்கிறார். இரவு தூங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி இருந்தால் விவேகானந்தர் வருவார். அதன் பின்னர் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வரும் என்றார்.

குஷ்பு பேச்சு

குஷ்பு பேச்சு

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறுகையில் தற்போது எதிர்க்கட்சிகள் இந்துத்துவாவை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரங்களில் தலையில் டர்பன் கட்டுவது, பூணூல், கோயில் போன்றவை ஞாபகம் வருகிறது. கோயிலுக்கு போக வேண்டாம் என கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு செல்கிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

ஆளுநர் விஷயம்

ஆளுநர் விஷயம்


ஆளுநர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தப்பாகவே இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு மேல் ஆளுநர் இருக்கிறார். தமிழகத்தில் அமைந்திருக்கும் அரசை மேற்பார்வையிடுவதற்கும் தவறு நடக்கும்போது தட்டிக் கேட்கும் ஆளாக ஆளுநர் இருக்கிறார்.

பொன்முடி

பொன்முடி

சடட்சபையில் இருந்து ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி அவதூறாக ஒருமையில் கூறி கையை காட்டுகிறார். அவர் செய்தது பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்ஸில் ஓசி பயணம் செய்வதாக கூறியிருந்தார். தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை. காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ். அதை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. ஆளுநருக்கு எதிராக கோஷம்போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நாளிதழ்களில் தினமும் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு பெண்ணுக்கு பிரச்சினை நடக்கத்தான் செய்கிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டு எதுவுமே நடக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

குற்றம் எங்கே நடந்தாலும்

குற்றம் எங்கே நடந்தாலும்

அவரது செயலும் அப்படித்தான் இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எனவே பெண்களுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தாலும் முறையாக விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் எழதிக் கொடுத்ததைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. பெண்களை ஓசில பயணம் செய்கிறார்கள் என கூறிய அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாகப் பேசுவது அவமரியாதை செய்வதுதான் திராவிட மாடலா? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Actress turned politician Khushbu Sundar condemns Minister Ponmudi for disrespecting The Tamilnadu Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X