Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடைபெற்றார் எம்பி வசந்தகுமார்.. பெற்றோர் சமாதி அருகில்.. சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மறைந்த எம்பி வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெற்றோர் சமாதி அருகிலேயே உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான வசந்த குமார் நேற்று முதல்நாள் மாலை கொரோனா காரணமாக உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் வசந்த குமார் அனுமதிக்கப்படடார்.

Last rituals for late MP Vasanthakumar to be held in Kanniykumari today

நுரையீரலில் தொற்று அதிகம் ஏற்பட்டு, உடல் நலிவடைந்து, சிகிக்ச்சை பலனின்றி வசந்த குமார் உயிரிழந்தார். இந்த நிலையில் இவருக்கு இறப்புக்கு பின்னர் கொரோனா நெகட்டிவ் என்று வந்த காரணத்தால் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தி நகரில் மக்கள் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பொதுமக்கள் பலர் திரண்டு வந்து வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் காமராஜர் அரங்கில் இவரின் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இவரின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நேற்று இரவில் இவரின் உடல் அவரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள், சொந்த ஊரை சேர்ந்த உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின் இன்று வசந்த குமார் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெற்றோர் சமாதி அருகிலேயே உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+