ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் சிலையை எப்போது உடைக்கணும் தெரியுமா?.. திமுக அமைச்சர்
கன்னியாகுமரி: ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் சிலையை கனவில்தான் உடைக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த் எல்லாருடனும் நல்ல நட்பில் இருப்பவர். அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.
அவர் ஆளுநரை சந்தித்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்து இருப்பதாக எதுவும் தெரியவில்லை. தான் திரையுலகில் இருக்கிறேன். அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்.

ஆளுநர் சந்திப்பு
அவருடைய சந்திப்பை எல்லாம் அரசியல் ஆதாயம் இருப்பது போல் காட்டுவது ரொம்ப தப்பு. ஆளுநரை பார்ப்பது அவர்களுடைய சார்பு அரசியல் என பார்த்தால் ஆளுநர் கட்சி அரசியலை நடத்த அந்த மாளிகையை பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி வரும். இது சரியில்லை. ஆளுநர் என்பவர் அரசாங்கத்திற்கு துணையாக இருக்க வேண்டியவர்.

ரஜினிகாந்த் சந்திப்பு
எனவே ஆளுநரை ரஜினிகாந்த் சந்திப்பதை எல்லாம் சாதாரண நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியதாக அரசியலை சாராத ஒருவர் சொல்வதற்கு நான் கருத்து சொல்ல முடியாது. ஆளுநர் அவரது மாளிகையில் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் ஆளுநர் என்பவர் அரசியல் இயக்கம் போல் இயங்குவது என்பது எல்லாம் நம் நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனநாயக ரீதியில்
ஏனென்றால் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் இருக்கிறது. இந்த தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசியலை கொண்டு வருவது என்பது எந்த காலத்திலும் பொய்த்து போக கூடிய ஒன்றாகும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆளுநர்கள் பல தவறுகளை செய்ய முற்பட்டுள்ளார்கள். அது தமிழகத்தை பொருத்தமட்டில் அது எந்த காலத்திலும் எடுபட்டது இல்லை.
Recommended Video

கனல் கண்ணன்
கனல் கண்ணன் கனவில்தான் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல்கண்ணன் , கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் எதற்காக வைக்கப்பட்டுள்ளது ? அதை அகற்ற வேண்டும் என கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பரபரப்பை கிளப்பினார். ரஜினிகாந்த்- ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் பேசியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் திமுக எதிர் கருத்தை கூறாமல் இருக்கிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications