Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மதவெறி இங்கு எடுபடாது".. வெள்ளை வேட்டி.. துண்டு.. சொன்னபடி கும்பாபிஷேகத்திற்கு போன அமைச்சர் மனோ!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் உள்ள குமாரசுவாமி கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

இவர் வேற்று மதத்தை சேர்ந்தவர். இவர் இந்து விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக பாஜகவினர் கடுமையான போராட்டங்களை செய்தனர். அதன்பின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையின் போதும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக பாஜகவினர் கடுமையான போராட்டங்களை செய்தனர். அமைச்சர் இங்கே வர கூடாது என்று கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கோவில்

கோவில்

இந்த நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கும் பாஜக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது. மனோ தங்கராஜுக்கு எதிராக போராட்டங்களை நடத்த உள்ளூர் பாஜக நிர்வாகிகள் தயாராக இருந்தனர்.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த சோமன் என்பவர், மனோ தங்கராஜுக்கு எதிராக வழக்கும் தொடுத்தார். அதில், ஆதிகேசவ பெருமாள் கோயிலில் என்பது வைணவ கோவில். அது புனிதமான தலம். இங்கு கோவில் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். எனவே கோவில் கும்பாபிஷேகத்தின் போது வேற்று மதத்தினரை அனுமதிக்க கூடாது. இந்த நிகழ்விற்கு வேற்று மதத்தினர் வர கூடாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

தீர்ப்பு என்ன?

தீர்ப்பு என்ன?

ஆனால் இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை, குடமுழுக்கு விழாவில் எல்லோரும் பங்கேற்க முடியும். இதில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என்ற விதி எதுவும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை விதிகள் அப்படி எதையும் சொல்லவில்லை. இது போன்ற மனுக்கள் தேவையில்லாத பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்று கூறி அந்த மனுதாரருக்கு கொட்டு வைத்து வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இன்று விழா

இன்று விழா

இந்த நிலையில், இன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாஜக இதை எதிர்த்து இருந்த போதும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டார். வெள்ளை முண்டு உடுத்தி, மேல் சட்டை அணியாமல், சுற்றி துண்டு போட்டு அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

கலந்து கொண்டார்

கலந்து கொண்டார்

அந்த கோவிலில் இன்று காலை 6.30 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமைச்சர்கள் மட்டுமின்றி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இருந்து அறநிலையத்துறை ஆணையர் குமார குருபரன், மாவட்ட கலெக்டர் அரவிந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

 பக்தர்கள் குவிந்தனர்

பக்தர்கள் குவிந்தனர்

தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் 1500 - ககும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Recommended Video

    அடேங்கப்பா! என்ன ஒரு வேகம்.. சிலம்பம் சுழற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ்.. வியந்து பார்த்த நாகர்கோவில்
    பேஸ்புக்

    பேஸ்புக்

    இந்த நிகழ்வு தொடர்பாக பேஸ்புக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்துள்ள போஸ்டில், எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி!
    மதுரை நீதிமன்றத்தின் கருத்து தான் பொதுமக்கள் அனைவருடைய கருத்து. பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+