கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காசியுடன் சூப்பர் நெருக்கம்.. யார் அந்த விஐபி மனைவி.. தோண்டி துருவும் போலீஸ்.. மீண்டும் பரபரப்பு

காசியின் லேப்டாப் - செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வரபோகிறது.. காரணம், காசியின் லேப்- டாப், செல்போன் ஆகியவற்றை ஆய்வுக்காக லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதனால் காசி விவகாரம் திரும்பவும் சூடு பிடித்துள்ளது!!

26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார்.

அவமானம்.. காந்தியின் சிலையை அவமதித்துவிட்டனர்.. பொங்கி எழுந்த அதிபர் டிரம்ப்.. கடும் கண்டனம்!அவமானம்.. காந்தியின் சிலையை அவமதித்துவிட்டனர்.. பொங்கி எழுந்த அதிபர் டிரம்ப்.. கடும் கண்டனம்!

மிரட்டல்

மிரட்டல்

முதல்முறை, 3 நாள் விசாரணையும், அடுத்த 2வது முறையாக 6 நாள் விசாரணையும் நடந்தது.. ஒருசில முக்கிய தகவல்கள் இவரிடம் அப்போது பெறப்பட்டதாக கூறப்பட்டது. பெண்களை மிரட்டுவது, ஆபாச வீடியோ அப்லோடு செய்வது, என காசிக்கு எல்லா உதவிகளையும் செய்த 19 வயது ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்னொரு நண்பர் சிங்கப்பூரில் உள்ளதால் அவரை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் எப்போது தமிழகம் திரும்பினாலும் கைது செய்ய போலீசார் ஏர்போர்ட்டிலேயே காத்துள்ளது.

லேப்டாப்கள்

லேப்டாப்கள்

காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.. காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சிபிசிஐடி

சிபிசிஐடி

அந்த ஆபாச வீடியோவில் பல விஐபிக்களின் மனைவிகள் காசியுடன் நெருங்கி பழகி உள்ளது பதிவாகி உள்ளது.. மேலும் காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே வந்தனர். இதையடுத்து காசி வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படாமலேயே இருந்தது.

விசாரணை

விசாரணை

இந்நிலையில், குமரி போலீசார் இதுவரை சேகரித்த எல்லா ஆவணங்கள், தகவல்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.. ஆனால் 4 வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக முடுக்கிவிட்டுள்ளனர்.

அனுமதி

அனுமதி

இதனிடையே, காசியிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்- டாப்கள், செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தனர்.. அதன்படியே தற்போது கோர்ட்டும் அனுமதி தந்திருக்கிறது.. இதையடுத்து லேப்- டாப், செல்போன்கள் ஆய்வுக்காக லேப்-புக்கு அனுப்பி உள்ளனர். சிபிசிஐடி வசம் போதுமான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாலும், வீடியோக்கள் உள்ள லேப்- டாப்புகளும், செல்போன்களும் லேப்-டெஸ்ட்டுக்கு சென்றுள்ளதாலும், காசியின் பல மர்ம முடிச்சுகள் அவிழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

English summary
nagarcoil kasi: young man kasi case have been transferred to cbcid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X