Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளியலறைக்கு போன கல்லூரி மாணவி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. நடந்த விபரீதம்

நாகர்கோவிலில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி ஒருவர் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில் : நாகர்கோவிலில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி ஒருவர் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல தெருக்கரையில் வசிப்பவர் பெலார்மின் அமிர்தராஜ். இவரது மகள் சகாய ஜான்சிலா (வயது 21).

சகாய ஜான்சிலா நாகர்கோவிலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்தார். இவர் புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வராமல் இருந்தாக கூறப்படுகிறது.

கதவு திறக்கப்படவில்லை

கதவு திறக்கப்படவில்லை

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை ஓங்கி ஓங்கி தட்டியபடி சகாய ஜான்சிலா பெயரை கூறி திறக்க கோரியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஒரு கட்டத்தில் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள்.

வடசேரி போலீஸ்

வடசேரி போலீஸ்

அங்கு சகாய ஜான்சிலா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சகாய ஜான்சிலா உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், காதலன் இறந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

விபரீத முடிவு

விபரீத முடிவு

தற்கொலை செய்து கொண்ட சகாய ஜான்சிலா கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். காதலன் இறந்த சம்பவம் சகாய ஜான்சிலாவை பெரிதும் பாதித்திருக்கிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த சகாய ஜான்சிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது, இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை

தற்கொலை

முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவமும் நடந்திருந்தது. சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45).இவர் அந்த பகுதியில்ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கும், மகனுக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் தனிக்குடித்தனம் சென்று வசித்து வருகின்றனர். சுரேஷின் கடைசி மகள் பெயர் மைத்தீஸ்வரி (வயது 18). இவர் ஒரு அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாகஇருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி மைத்தீஸ்வரி, கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்த பிரவீன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

காதலியும் தற்கொலை

காதலியும் தற்கொலை

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் கடந்த மாதம் பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தீஸ்வரி உடனே தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோர் உயிரை காப்பாற்றியதும் தெரியவந்தது. இருப்பினும், காதலன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து வந்த மைத்தீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் அரசின் உதவி எண் ஆன 104ஐ தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். அதேபோல் iCALL (Hours: Mon-Sat, 10 AM-8 PM. Languages: English, Hindi, Marathi, Gujarati, Bengali, Tamil)க்கு 9152987821 என்ற எண்ணில் அழைத்து நிவாரணம் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+