கன்னியாகுமரியின் கனவு சார்.. திருநெல்வேலிக்கு அல்வாவை விட இனிப்பான செய்தி.. தெற்கு ரயில்வே செம்ம
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நாகர்கோவில்- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதையில் விரைவில் வெள்ளோட்டம் நடைபெற போகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளை தீவிரமாக்கி உள்ளது தெற்கு ரயில்வே..
இந்தியாவின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. எந்த ஊரில் ரயில், விமானம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக உள்ளதோ அந்த ஊர் பெரிய அளவில் பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது. இதில் குறிப்பாக ரயில் கட்டமைப்பு என்பது இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் சரக்குகளை எடுத்து செல்லவும் ,பயணிக்கவும் முடியும். அந்த ஊருக்கு மிகப்பெரிய நன்மை தரக்கூடியதாக ரயில் பாதை இருக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை முக்கியமான ரயில் பாதை இருக்கிறது. இந்த பாதை சென்னை உடன் முடியாது. டெல்லி வரைக்கும், கொல்கத்தா வரைக்கும், மும்பை வரைக்கும், ஏன் காஷ்மீர் வரைக்குமே செல்கிறது.
தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கிலோ மீட்டர் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை பணிகள் 2 திட்டங்களாக நடந்து வருகிறது. மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இடையே 159 கிலோ மீட்டர் தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி- நெல்லை- நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் ஒரு திட்டமாகவும் தெற்கு ரயில்வே செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டது. கடந்த மாதம் நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி வரை கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. இதேபோல் மேலப்பாளையத்திலும் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்ததால் அங்கு இன்று வெள்ளோட்டம் நடந்துள்ளது. இதன் மூலம் நாகர்கோவில்- திருநெல்வேலி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்துள்ளதால் விரைவில் இந்த வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.. அப்படி வந்தால், கூடுதல் ரயில்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இயக்க முடியும்.
இதனிடையே நாகர்கோவில்- கன்னியாகுமாி மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையிலான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தண்டவாளம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒழுகினசேரி பாலம் அருகே பணிகள் முடிந்தால் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் வாய்ப்பு உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications