நாகர்கோவிலில் ஷாக்! பேண்ட் சரியாக தைக்கவில்லை என.. டைலர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை

Subscribe to Oneindia Tamil

Nagercoil crime police
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பேண்ட் சரியாக தைக்கவில்லை என்று கூறி டெய்லர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 36 வயது வயதான சந்திரமணி என்பவரை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்திருக்கின்றனர்.

நேற்று மாலை நாகர்கோவில் டதி ஸ்கூல் ஜங்ஷனிலிருந்து டபுள்யூசிசி கல்லூரி செல்லும் சாலையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட போலீசார் 100க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து 38 வயதான சந்திரமணி என்பரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அதாவது சில நாட்களுக்கு முன்னர் சந்திரமணி, இங்குள்ள டெய்லர் கடையில் பேண்ட் தைக்க கொடுத்திருக்கிறார். கொடுத்த பேண்ட் சொன்ன டைமக்கு சந்திரமணி கைக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டு மூன்று முறை டெய்லர் கடைக்கு அலைந்திருந்த சந்திரமணி ஏற்கெனவே கடுப்பில் இருந்திருக்கிறார். இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் பேண்ட் தைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேண்ட் சொன்ன சைஸில் இல்லை.

எனவே நேற்று மாலை சந்திரமணி டெய்லர் கடை உரிமையாளரான செல்வத்தை நேரில் சந்தித்து, பேண்ட் சொன்ன சைஸில் இல்லை என்று கூறியிருக்கிறார். இது வாக்குவாதமாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் டென்ஷனான சந்திரமணி, கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்த செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை செல்வம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை சுதாரிப்பதற்குள் கழுத்து, மார்பக பகுதிகளில் கத்தி குத்து ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கடைக்குள் ரத்த வெள்ளத்தில் செல்வம் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சந்திரமணிக்கு அடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அக்கம் பக்தக்தில் தகவல் சொல்லி செல்வத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். முதற்கட்டமாக டெய்லர் கடையிலிருந்து டபுள்யூசிசி கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதனை செய்தனர். அதில், சந்திரமணியின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது. அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 6 மணி நேரத்திற்குள் சந்திரமணியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பேண்ட் சொன்ன சைஸில் தைத்து கொடுக்காததும், அதை கேட்க சென்ற போது முறையாக பதிலளிக்காததாலும் செல்வத்தை கொலை செய்ததாக சந்திரமணி கூறியுள்ளார்.

பேண்ட் சரியாக தைக்காததால் டெய்லர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+