கன்னியாகுமரியில் ஒரே நிமிடத்தில் 30 லட்சம் ஏமாந்த நாகர்கோவில் ஆசிரியர்.. சின்ன தவறால் மொத்தமாக காலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த 63 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வீடியோ காலில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர் போலீஸ் அதிகாரி உடையில் தோன்றி, 'நான் மும்பை போலீஸ் அதிகாரி. உங்களது வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறினார். இதனால் பயந்து போன ஆசிரியர் ரூ.30 லட்சத்தை பறிகொடுத்துள்ளார். எப்படி 30 லட்சம் பணம் ஒரு சில நிமிடங்களில் பறிபோனது என்பதை பார்ப்போம்.
இன்றும் சிலர் டிஜிட்டல் அரஸ்ட் என்பதை நம்பி பணத்தை இழப்பதுதொடர்கிறது. என்ன தான் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நடைமுறையில் வரும் போது, அதனை புரிந்து ஏமாறாமல் இருக்க மக்களுக்கு தெரியவில்லை.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசிரியருக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த 63 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வீடியோ காலில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது போனில் மறுமுனையில் பேசியவர், போலீஸ் அதிகாரி உடையில் தோன்றி உள்ளார். மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.. தொடர்ந்து ஆசிரியரிடம், உங்களது வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதால் தற்போது உங்களை வீட்டு காவலில் (டிஜிட்டல் கைது) வைத்துள்ளோம் என்று மிரட்டியுள்ளார். நம்ப வைப்பதற்காக போலியான அரஸ்ட் வாரண்டை ஆன்லைனில் காட்டி எச்சரித்துள்ளார். இதை ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உண்மை என்று நம்பிவிட்டார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், ஆசிரியரின் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பும்படி கூறினார். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பும்படியும், அந்த பணத்தை ரிசர்வ் வங்கியில் கொடுத்து சரிபார்த்து விட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி நம்ப வைத்திருக்கிறார்.
ஏற்கனவே அச்சத்தில் இருந்த அவர் உடனே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். ஆனால் பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் மர்ம ஆசாமி வீடியோ கால் அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த எண்ணை மீண்டும் அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போது தான் மர்ம ஆசாமி, தன்னை ஏமாற்றி மோசடி செய்தது ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் புகார் அளித்துள்ளார். அதன்போில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். யாராவது உங்கள் வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னால், போலீஸ் உள்பட யாராக இருந்தாலும் ஏற்காதீர்கள். ஏதேனும் எதிர்பாராதவிதமாக உங்களை மிரட்டுவதாக தெரிந்தால்.. உடனே போன் அழைப்பை துண்டித்துவிட்டு சைபர் கிரைமிற்கு அழைத்து விஷயத்தை கூறுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications