"குமட்டும்" ஆபாசம்.. பெண்களை நாசம் செய்த.. நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை.. கன்னியாகுமரி பரபரப்பு
கன்னியாகுமரி: 120-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து, ஆபாச வழக்கில் கைதாகி இருந்த, நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பினை தந்து உத்தரவிட்டுள்ளது.
யார் இந்த காசி? நாகர்கோவிலில் சுகுனா சிக்கன் டீலர் மகன்தான் 26 வயசு காசி.. இவருக்கு சுஜி என்று மற்றொரு பெயரும் உண்டு.. சென்னையில் பட்டப்படிப்பு முடித்தவர்.. சின்ன வயசில் இருந்தே ஆடம்பர வாழ்க்கை இவருக்கு தானாக அமைந்தது.
அதிகப்படியான செல்லம், இவரை தாறுமாறாக பயணிக்க வைத்தது.. இவர் ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் முதலும், மூலதனமும்..!!
சிறுமிகள்: இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்தவர்... பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் முதல் அந்த பெண்களின் அம்மாக்கள் வரை ஏமாற்றி உள்ளார்.. இதில் விஐபிக்களின் மனைவிகளும் அடக்கம்!
பட்டப்படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. நாளெல்லாம் சிக்கன் கடையில் இருந்தாலும், சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடவும், இதை பார்த்து ஏகப்பட்ட பெண்கள் காசியின் நட்பில் விழுந்துவிட்டனர்..

பணம் பறிப்பு: இதுவே காசிக்கு வசதியாக போய்விட்டது.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்து வந்திருக்கிறார். காலேஜ் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்வதாக பெண் டாக்டரை ஏமாற்றி, பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார்... அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துவைத்து கொண்டுள்ளார்.
முதல் புகார்: பிறகு இந்த பெண் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பத்தில் காசி கேட்ட பணத்தை தந்தாலும், காசியின் பிக்கல் பிடுங்கல் அதிகமாகி உள்ளது. அதற்கு பிறகுதான் இந்த பெண் டாக்டர் போலீசுக்கு போனார்.. இவர்தான் காசி மீது புகார் தந்த முதல் பெண் ஆவார்.. இந்த புகாரின்பேரில் கடந்த 2020-ல் காசி கைதானார்.. போலீசாரின் விசாரணையும் தீவிரமானது.. தோண்ட தோண்ட காசியின் ஆபாசமும் வெளியே வந்தது..
கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 400 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்தனர்.. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லீலைகள்: காசியின் லீலைகள் சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தொடர்ந்துள்ளது.. தன்னுடைய காரில் வைத்தே, பெரும்பாலான பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார்.. தொழிலதிபர்களின் மனைவிகள், விஐபிக்களின் மனைவிகள் என யாரையுமே இந்த காசி விட்டு வைக்கவில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரங்களும் சிக்கி உள்ளதாக கூறப்பட்டது.
எப்படியும் 80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீசார் சந்தேகப்பட்டனர்.. ஆனால், நூற்றுக்கணக்கான பெண்கள் காசியால் சீரழிந்து போயுள்ளதை கண்டு மிரண்டு போனார்கள்..

பெண் டாக்டர்: அந்த பெண் டாக்டருக்கு பிறகு, விஐபிகள் சிலரின் மனைவி உட்பட, பலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் காசிக்கு எதிராக பலரும் புகார்களை அளிக்க முன்வந்தனர்.. மொத்தம் 5 பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். மாதர் சங்கத்தினரின் போராட்டங்களால் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முதலில் காசி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன...
இந்த வழக்கில் ஏற்கனவே கந்துவட்டி, ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன... மேலும் 5 வழக்குகளின் ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டி வந்தனர்.. முதலில், 400 பக்க அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அதில், காசி, கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி, பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அவர்களிடம் மிருகத்தனமாக காசி நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2-வதாக, கந்துவட்டி வழக்கில் காசிக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது... பிறகு 3வது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.. போக்சோவும் பாய்ந்தது. குண்டர் சட்டமும் பாய்ந்தது.
ஜாமீன் மறுப்பு: இப்படி அடுத்தடுத்த குற்றப்பத்திரிகைகள் தாக்கலாகி உள்ள நிலையில், காசி வழக்கு இனி வெடித்து கிளம்பும் என்றும், அவரிடம் சிக்கியவர்கள் யார் யார் என்றெல்லாம் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இதற்கு நடுவில் காசிக்கு ஆதரவாக நின்று சாட்சியங்களை அளித்ததாக, இவரது அப்பாவும் கைதானார்..
மற்றொரு புறம் ஜாமீனை நாடி காசி கோர்ட் படிகளை ஏறி இறங்கினார்.. ஆனால், இந்த வழக்கில் சிறுமிகள் சிலர் உள்ளனர் என்றும், குறிப்பாக, 17 வயது சிறுமி சாட்சி அளித்திருந்ததாலும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாலும் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.
தண்டனை: இதையடுத்து, காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இதனைத் தொடர்ந்து தீர்ப்பிற்காக வழக்கை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பினை தந்து உத்தரவிட்டுள்ளது.
காசி மீதான வழக்குகளில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால், காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது.. பெண்களை நாசம் செய்யும் காமவெறியர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாகவும் அமைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications