கன்னியாகுமரி ஹோட்டலில் கூகுள் பேயில் பணம்.. இப்படி கூட மோசடி செய்ய முடியும்.. இறுதியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே ஹோட்டலில் சாப்பிட்ட உணவிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவது போல் நாடகமாடிய நபர்களிடம் இருந்து கணக்கில் பணம் வரவில்லை.. பணத்தை கேட்ட ஊழியரை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்கள் இரண்டு பேர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் பேயில் பணம் வாங்குகிறீர்கள் என்றால் , டிக் வருகிறது என்று நம்பி ஓகே சொல்லாதீர்கள். உங்களை ஏமாற்றிவிட்டு, எஸ்கேப் ஆக வாய்ப்பு உள்ளது. உங்களிடம் வாய்ஸில் சொல்லும் மிஷின் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி மிஷின் இருந்தால் மட்டுமே உங்களை ஏமாற்ற முடியாது. அதேபோல் உங்களிடம் மெஷின் வேலை செய்யவில்லை என்றால், உடனே நீங்க செல்போனில் மெசேஜ் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் தற்போது கூகுள் பேயில் நூதனமான முறையில் மோசடி நடக்கிறது. எனவே கவனமாக இல்லாவிட்டால் பணத்தை இழந்துவிடுவீர்கள். நிறைய கூட்டம் வரும் இடங்களில் தான் இப்படியான மோசடிகள் நடக்கிறது. குறிப்பாக உணவகங்களில் அதிகம் ஏமாற்றுகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஷாக்கீர் இவர் கடையால் சந்திப்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீப காலமாக ஷக்கீருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹோட்டல் ஊழியர்கள் கடையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி இரண்டு இளைஞர்கள் ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டு உள்ளனர். தொடர்ந்து சாப்பிட்ட உணவிற்க்கான பணத்தை கூகுல் பே மூலம் செலுத்துவதாக கூறி நாடகமாடி உள்ளனர்.'

ஆனால் அவர்கள் செலுத்தியதாக கூறிய பணம் ஹோட்டல் கணக்கில் வராததால் கடை ஊழியர்கள் மாஹின் சாப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாஹினை அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குவளையை எடுத்து விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். இதில் தப்பி வெளியே ஓடிய மாஹீன் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்து எழும்பி ஓடிய பின்னும் வாலிபர்கள் அவரை விடாமல் துரத்தி துரத்தி விரட்டி சென்று தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
அவர்களை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் பிடித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையாலுமூடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களையும் பிடித்து சென்று காவல்நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் இருவரும் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஷிபு 28, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜில் 31, என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் மாஹீனை விரட்டி சென்று தாக்கிபோது, வெளியே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் விஜித் காலில் அடிபட்டதை தொடர்ந்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், ஷிபுவை சிறையிலும் அடைத்தனர். இந்த நிலையில் தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications