கழுத்து அறுபட்ட நிலையில் புது மாப்பிள்ளையின் பிணம்.. என்ன நடந்தது.. பதட்டத்தில் இரணியல்
இரணியல்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது ஆணவக் கொலையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள கடேற்றி பகுதியை சேர்ந்த விஜீஸ் (31) என்று தெரிய வந்தது. இதனையடுத்து குளச்சல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.கார்த்திக் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏன் இந்தக் கொலை
விஜீஸ் கொலையுண்ட இடத்தில் கத்தி உள்ளிட்ட எந்த ஆயுதமும் சிக்கவில்லை. அந்த இடத்தில் கொலையாளிகள் எதையும் விட்டுச் சென்றிருக்கவில்லை. இதனால் போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டது.
[ஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை ]

கொலை செய்து கொண்டு வந்தனரா
இதனால் விஜீஸை வேறு இடத்தில் வைத்துக் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

காதலித்து மணம்
விஜீஸ் காதல் கல்யாணம் செய்து கொண்டவர். 5 -மாதங்களுக்கு முன் தான் காதலித்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி கடத்தி திருமணம் செய்துள்ளார்.

பெண் வீட்டாருக்குத் தொடர்பா
எனவே அந்த காரணத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆணவக் கொலையா இது என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications