ஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை
சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

இஸ்தான்புல்: சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிசவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர்.
அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். தனது விவாகரத்து குறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார்.

கொலை செய்தனர்
ஆனால் சவுதி தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டார். இவர் அந்த தூதரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் மோசம்
இந்த நிலையில் இந்த கொலை குறித்து சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அதெல் அல் ஜுபைர் கூறுகையில், இந்த கொலை மிகப்பெரிய தவறான விஷயம். சவுதி இதில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதனால் உலக அளவில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது.

நாங்கள் இல்லை
இதற்கு முழுக்க முழுக்க அரசு காரணம் என்றும் சொல்ல முடியாது. அரசின் நேரடி உத்தரவின் பேரில் இந்த கொலை நடக்கவில்லை. இந்த கொலையை 18 பேர் கொண்ட குழு செய்துள்ளது. சிலர் தன்னிச்சையாக கொடுத்த உத்தரவின் பேரில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றுள்ளார்.

எங்கே இருக்கிறது
மேலும், கொலை செய்யப்பட்ட ஜமாலின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அவரை எப்படி கொலை செய்தார்கள் என்றும் தெரியவில்லை. அவரை கொன்றுவிட்டு எங்கே உடலை கொண்டு சென்றார்கள் என்று விசாரித்து வருகிறோம். சவுதிதான் இந்த கொலையை செய்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

பல சந்தேகம்
இந்த நிலையில் பல விதமான சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சவுதி உடலை காணவில்லை என்று பொய் சொல்வதாக கூறப்படுகிறது. அவரை வைத்து பெரிய அரசியல் திட்டங்களை சவுதி தீட்டி இருக்கிறது. அதனால்தான் அவரது உடலை அளிக்க மறுக்கிறது என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications