வெளிநாட்டில் செட்டிலான தமிழர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு அடித்த யோகம்! 1 பைசா கூட செலவில்லை தெரியுமா?
கன்னியாகுமரி: வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் தமிழகம் வந்த அயலக தமிழ் இளைஞர்கள், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அயல் நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் அயலகத் தமிழர்களின் குடும்பங்களில் இருந்து 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு இணைக்கும் விதமாக ''வேர்களைத் தேடி" என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை.

இதில் முதல்கட்டமாக இவ்வாண்டு, கனடா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 57 மாணவர்கள் "வேர்களைத் தேடி" திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வரவழைப்பட்டனர்.
அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி, கே.எஸ்.மஸ்தான் "வேர்களைத் தேடி "பயணத்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாமல்லபுரம், ஆலம்பாறை கோட்டை வள்ளலாரின் சத்ய ஞான சபை, வீராணம் ஏரி, கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம், சுவாமிமலை உலோக பொருட்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவிய உருவாக்க கூடங்கள், தஞ்சை பெரியக்கோவில், சரஸ்வதி மஹால், சித்தன்னவாசல், காரைக்குடி செட்டிநாட்டுக்கலாச்சாரம் ஆகிய இடங்களை கண்டு களித்துவிட்டு விருதுநகர் மாவட்டம் சென்றனர்.
அங்கு கிராம மக்களுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள். தொடர்ந்து ஆதிச்சநல்லூரை பார்வையிட்டுவிட்டு கன்னியாகுமரி வந்தடைந்தனர். அங்கு திருவள்ளவரின் பிரமாண்டமான சிலையை படகில் சென்று கண்டுக்களித்தனர். திருக்குறளின் பெருமைகளை நினைவுகூர்ந்த அயலகத் தமிழ் இளைஞர்கள் திருக்குறளை உச்சரித்து திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நீர்வழிப்பாலத்தையும் கண்டுகளித்தனர். இன்று குமரியில் இருந்து புறப்பட்டு கூந்தன்குளம், திருநெல்வேலி வழியாக மதுரை சென்றடைகிறது பயணக்குழு.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications