கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொட்ட சொட்ட நனையுது அரசு பேருந்து! பஸ்ஸுக்குள் குடைபிடித்து பயணம் செய்யும் பயணிகள்! எங்க தெரியுமா?

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் தொடரும் மழை காரணமாக ஓட்டை உடைசலான அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Recommended Video

    பஸ்ஸுக்குள் குடைபிடித்து பயணம் செய்யும் பயணிகள் - வீடியோ

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து 300ற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நாள்தோறும் பயணிகளுக்காக பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவற்றில் நாற்பது சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால் ஓட்டை உடைசல்களுடன் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்து காணபடுகிறது .

     உச்சத்தில் கோடை வெயில்.. அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கு? வானிலை மையம் தகவல் உச்சத்தில் கோடை வெயில்.. அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கு? வானிலை மையம் தகவல்

    அரசு பேருந்து

    அரசு பேருந்து

    அவற்றிலும் பல பேருந்துகள் மிகவும் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர். அத்துடன் பல பேருந்துகளில் மேற்கூறைகள் முற்றிலும் சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் குமரியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் ஓட்டை உடைசல் பேருந்துகளில் நேரகாக பேரூந்திற்கு உள்ளேயே மழை நீர் செல்கிறது.

    பேருந்துக்குள் மழை

    பேருந்துக்குள் மழை

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் குமரிமாவட்டம் கிராமபுற உள்ளூர் பேருந்தில் மழை பெய்து மழைநீர் பேருந்திற்குள் வந்து உடலில் தண்ணீர் கொட்டியதால் குடை பிடித்தபடியே பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சில பயணிகள் தங்கள் உடைமைகளை கையில் பிடித்துவாறு நின்றுகொண்டே சென்றனர்.

    பயணிகள் வேதனை

    பயணிகள் வேதனை

    சிலர் பாதிவழியிலேயே இறங்கி வேறு பேருந்தில் பயணத்தை தொடர்ந்தனர். சிலர் பயணக்கட்டணத்தை திருப்பித்தருமாறு கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கையில் குடை பிடித்தவாறு சிலர் பயணித்தனர். இந்த நிலை பார்த்தப்பதற்கு நையாண்டி போல் இருந்தாலும், இதுதான் அரசுப்பேருந்துகளின் அவலநிலை என சில பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    பயணிகள் கோரிக்கை

    பயணிகள் கோரிக்கை

    அத்துடன் அரசு பேருந்துகள் இந்த அளவிற்கு மோசமான நிலையில் இயக்கப்படுவது, அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். மேலும் கன்னியாகுமரி மாவட்ட பணிமனைகளில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை சரிசெய்து, பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    English summary
    The video of a passenger traveling in a government bus with an umbrella inside the bus, which was broken due to continuous rain in Kanyakumari, is spreading fast on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X