நாளை குமரி வருகிறார் பிரதமர் மோடி… 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
Recommended Video

குமரி: பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வரை உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்திலுள்ள ஹெலிபேட் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் வைத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திலும் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தற்போது இந்த மைதானத்திற்கு அவ்வப்போது வந்து அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் பகுதி முழுவதும் எஸ்.பி.ஜி போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு ஐந்து அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் தனி நபர்கள், வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று மற்றும் நாளை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் விழாவிற்கு வருகை தரும் பிரதமர் அவர்கள் குமரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் முடிக்க பட்டுள்ள .பார்வதிபுறம் ,மார்த்தாண்டம் மேம்பாலங்களை திறந்து வைக்க உள்ளார் .
அதே போன்று சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் , ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் .
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications