திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கவுன்சிலர்.. போலீஸ் வலைவீச்சு.. நாகர்கோவிலில் பரபர!
கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நவீனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். இவர் கன்னியாகுமரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மேயர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தனது வாகனத்தில் இருந்த போது, காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் கார் மூலம் தன்னை இடிக்க முயன்றதாகவும், அதை தனது உதவியாளர் கேட்டபோது கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் மகேஷ்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் நவீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கூட்டணி கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் மேயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்தக் கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பின்னர், வாக்கெடுப்புக்கு வராமல் சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications