மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?".. துளைத்தெடுத்த மக்கள்
விஜயகாந்த் குறித்து பிரேமலதாவிடம் அஞ்சு கிராம மக்கள் விசாரித்தனர்.
கன்னியாகுமரி: "மேடம்.. கேப்டன் எப்படி இருக்காரு.. நல்லா இருக்காரா?" என்று அஞ்சுகிராம மக்கள் பிரேமலதாவை துளைத்தெடுத்து விட்டார்கள்!
நேற்று கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி அஞ்சுகிராமம் என்ற பகுதிக்குள் பிரேமலதா வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த மக்கள், பிரேமலதாவை சூழ்ந்து கொண்டனர். "மேடம்.. முதல்ல கேப்டன் எப்படி இருக்கார்.. அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?" என்று ஆர்வத்துடன் கேட்டனர்.

இதை கேட்டு பூரித்து போன பிரேமலதாவோ, "கேப்டன் சூப்பரா இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் உங்க முன்னாடி வருவார். இப்பதான்.. 5 நிமிஷத்துக்கு முன்னாடி கூட அவர்கிட்ட செல்போனில் பேசினேன். இப்போ பிரச்சாரத்துக்கு எங்க போக போறேன்னு கேட்டாரு. நான் அஞ்சுகிராமத்துக்கு போறேன்னு சொன்னேன். அதுக்கு கேப்டன், அஞ்சுகிராமமா.. அங்க எல்லாரையும் நான் ரொம்ப கேட்டதாக சொல்லுன்னு என்கிட்ட சொன்னார்" என்றார்.
இதைக்கேட்டதும் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகுதான் பிரேமலதா பிரச்சாரத்தையே ஆரம்பித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications