கன்னியாகுமரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. நாகர்கோவில் இளைஞர்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க
கன்னியாகுமரி: நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. நிறுவனங்கள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அரசு ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. குறிப்பிட்ட முகாமில் பங்கேற்போருக்கு அங்கேயே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்படும். அதாவது உடனடியாக வேலைக்கான ஆர்டர் வழங்கப்படும். தனியார் துறையில் சரியான வேலைவாய்ப்பு தேடும் நபர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இந்த முகாம்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது.
இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முகாமில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம். முகாம் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுனர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் துறையில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் எளிதாக வேலை பெறும் வகையில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைதளம் செயல்பட்டு வருகிறது. இதில் வேலை தேடுவோர் தங்களுக்கு தகுதியான வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெற முடியும். அதேபோல் எந்த மாவட்டத்தில் எந்தெந்த வேலைகள் காலியாக உள்ளது. என்ன சம்பளம் கிடைக்கும்.. எப்படி விண்ணப்பிப்பது என பல்வேறு விஷயங்கள் அந்த இணையதளத்தில் இடம் பெற்று இருக்கிறது.
அதேபோல் நான் முதல்வன் என்ற ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெற்று தகுதியான வேலைகளுக்கும் சேர முடியும். வேலைகளுக்கு சேர திறமை முக்கியம் என்கிற நிலையில், அப்படிப்பட்ட வேலைகளுக்கு திறமையை வளர்த்துக் கொள்ள நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.












Click it and Unblock the Notifications