ஏன் திடீர்ன்னு.. தமிழகத்திற்கு நாளையே விசிட் அடிக்கும் பிரியங்கா காந்தி.. மிக முக்கிய "அசைன்மென்ட்"!
கன்னியாகுமரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை கன்னியாகுமரி வருகிறார். இவருக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்த்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார். கொரோனா காலத்தில் மக்களுக்கு இவர் சேவை செய்து நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.. மரணம் அடைந்தார்.

போட்டி
இதனால் தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கு லோக்சபா இடைத்தேர்தல் வருகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பாக மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்படுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக விஜய் வசந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.. இவரின் தேர்வு கன்னியாகுமரி அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் என்ன
ஆனால் சட்டசபை தேர்தல் நடப்பதால் பெரிய அளவில் இந்த இடைத்தேர்தல் மீது திமுக கூட்டணி கவனம் செலுத்தவில்லை. திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் இங்கு பெரிதாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. விஜய் வசந்த் மட்டுமே இங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டசபை தேர்தல் முக்கியம் என்பதால் இதில் நிர்வாகிகள் கவனம் செலுத்தவில்லை.

பாஜக வியூகம்
ஆனால் பாஜகவோ இங்கு எப்படியாவது வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது. தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு பாஜக எம்பியை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனை களமிறக்கி உள்ளது. இவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைமை உறுதியாக இருக்கிறது. இதனால்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இங்கு நேரடியாக வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

ஆனால் என்ன
ஆனால் விஜய் வசந்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. கன்னியாகுமரி காங்கிரசில் நிறைய உட்கட்சி பூசல்களும் உள்ளன. இதை எல்லாம் சரிகட்டும் வகையிலும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையிலும் நாளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி லோக்சபா வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

அசைன்மென்ட்
குமரியில் நிலவும் கோஷ்டி மோதலை சரி செய்து , கடைசி 10 நாட்கள் நன்றாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரியங்கா காந்திக்கு மேலிடம் கொடுத்து இருக்கும் அசைன்மென்ட் என்கிறார்கள். மறைந்த எம்பி வசந்த் காங்கிரசில் அதிகம் மதிக்கப்பட்ட தலைவர். சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் விருப்பமான தலைவராகவும் இருந்தார்.

விருப்பம்
இந்த நிலையில் அவரின் மகன் விஜயின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது . முக்கியமாக பொன்னாரை வெற்றிபெற விட கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதனால் குமரி கோஷ்டி மோதல்களை சரி செய்யும் வகையிலும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் பிரியங்கா காந்தி நாளை தமிழகம் வருகிறார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications