“கணவன் விந்தில் விஷம்!” தக்கலையில் தகாத முறையில் அத்துமீறிய மதபோதர்.. அதிரடி கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம், மத போதகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போதகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதை போல சிலர், மத குருக்களிடம் செல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த நடைமுறை இன்றும் நீடித்து வருகிறது. அறிவியல் உலகம் எவ்வளவோ சாதனைகள் செய்தாலும், அது சாமானிய மக்களிடம் சென்று சேர்வதில் உள்ள சிக்கல்தான், மத குருக்களை மக்கள் அணுகும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆனால் இப்படி போகும் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறிவிடுகிறது என்பதுதான் யதார்த்தம்.

அதற்கு மற்றுமொரு உதாரணம் தற்போது தக்கலையில் நடந்திருக்கும் சம்பவம். இப்பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் சமீப நாட்களாக கடுமையான உல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். சிகிச்சையின் மீது இருக்கும் நம்பிக்கையை விட, மத குருக்களிடம் இருக்கும் நம்பிக்கை இவருக்கு அதிகம். எனவே, அக்கம் பக்கத்தினரின் பேச்சை கேட்டுக்கொண்டு அவர், மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபைக்கு வழிபாட்டுக்கு சென்றிருக்கிறார்.
நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை போதகர் ரெஜிமோனிடம் இவர் கூறியிருக்கிறார். அவரும் சில அறிவுறுதல்களை கொடுத்திருக்கிறார். வழிபாட்டில் முழு ஈடுபாடாக இருக்க வேண்டும், மாத மாதம் வருமானத்தில் 10% அளவுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். சில நாட்கள் இப்படியே கழிந்திருக்கிறது. ஆனால் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நோயின் தீவிரத்தை போதகரிடம் இளம்பெண் தெரிவிக்க போதகர் பலே ஐடியாவை கொடுத்திருக்கிறார்.
அதாவது, "நீ உன் கணவனுடன் உறவு கொள்ளக்கூடாது. கணவனின் விந்து விஷம் நிறைந்ததாக இருக்கிறது. அதற்கு பதிலாக முழு ஆசியை கொண்ட என்னிடம் உறவு கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லி இளம்பெண்ணிடம் அத்துமீறிய இருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்து, காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணிடம் அத்துமீறிய போதகரை கைது செய்துள்ளனர். நோயை குணப்படுத்துவதாக சொல்லி போதகர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த இளம்பெண்ணின் நண்பர்கள் சிலர், "நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த பெண்ணை சிலர் வழிபாட்டு முறைக்குள் தள்ளி விட்டிருக்கிறார்கள். அப்பெண் தவறாமல் சபைக்கு சென்று வந்திருக்கிறார். காணிக்கையும் கூட கொடுத்திருக்கிறார். ஆனால் இப்படி நடக்கும என்று அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. புகாரின் அடிப்படையில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications