சேலம் இளைஞருக்கு கன்னியாகுமரியில் வந்த செல்ஃபி ஆசை.. கடைசியில் கனவிலும் நடக்க கூடாத சம்பவம்
குமரி: சேலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நண்பர்களுடன் வந்த இளைஞர் குமரி கடற்கரையினை சுற்றிப்பார்த்த போது, செல்ஃபி மோகத்தால் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
நமது கைகளில் ஸ்மார்ட் போன்கள் வரத்தொடங்கியதும், கேம்ஸ்களில் ஒரு தரப்பினரும், ரீல்ஸ் எடுப்பது, செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வது என இன்னொரு தரப்பினரும் இறங்கியுள்ளனர். பெரும்பாலானோர் ரீல்ஸ் எடுத்து லைக்ஸ்கள் வாங்க வேண்டும் என்று எண்ணி ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். எனினும் எதை செய்தாலும் அதனை பாதுகாப்போடு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

இதனால் இப்படி செல்ஃபி எடுக்க நினைத்து உயிரை விட்டவர்கள் ஏராளம். அப்படித்தான் தற்போது குமரியில் பாறைகளில் நின்று செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரை விட்டிருக்கிறார். சேலத்தை சேர்ந்த அந்த வாலிபர் நண்பர்களுடன் சுற்றுலா வந்த நிலையில் கடைசியில் செல்ஃபி மோகத்தில் உயிரை விட்டுள்ளார். இளைஞரின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத காட்சிகள் கண்ணீரை ஈரமாக்குகின்றன.
சேலம் மாவட்டம் மாரமங்கலத்தை சேர்ந்தவர் விஜய் மணி (வயது 27). விஜய் மணி நேற்று முன் தினம் தன் நண்பர்கள் 26 பேருடன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்படியே குமரி கடற்கரைக்கு சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று பிளான் செய்துள்ளனர்.
அதன்படி நேற்று மாலை இளைஞர்கள் 27 பேரும் குமரி கடற்கரைக்கு வந்தனர். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது விஜய் மணி உள்ளிட்ட சிலர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பாறைக்கு சென்று செல்ஃபி எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் மணி தவறி கடலில் விழுந்துள்ளார்.
இதில் கடல் அலை இழுத்துச்சென்றதில் தண்ணீரில் நிலை கொள்ள முடியாமல் விஜய் மணி தவித்துள்ளார். நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் இளைஞரை மீட்கப் போராடினர். படகு மூலம் கடலில் சென்றும் தேடினர். ஆனால் இரவு வரை தேடியும் வாலிபரை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் விஜய் மணியை போலீசார் பிணமாக மீட்டனர். இரவே வாலிபர் கடலில் விழுந்த செய்தி வாலிபரின் உறவினர்கள், குடும்பத்தினர் அங்கு வந்தனர். பிணமாக மீட்கப்பட்ட விஜய் மணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் வாலிபரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாக்குமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனினும் ஒருசில நேரங்களில் இதுபோன்று துரதிருஷ்டவசமான சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்போடு புகைப்படம் எடுக்க வேண்டும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தாலே இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications