நாகர்கோவிலில் அசைவத்துக்கு நோ சொன்ன ஸ்டாலின்! பியூர் வெஜ் ஒன்லி! கடல் மாவட்டத்தில் மீன் இல்லாத மெனு!
வெளியூர் பயணங்களின் போது அசைவ உணவுகளை தவிர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி: முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்ற நிலையில் அங்கு மீன் உள்ளிட்ட அசைவ உணவுக்கு 'NO' சொல்லிவிட்டாராம்.
கடல் மாவட்டத்துக்கு சென்றும் கடல் மீன்கள் இல்லாத மெனுவின் கீழ் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அண்மைக்காலமாக உடலை ஃபிட்டாகவும், ஆரோக்யமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் ஸ்டாலின்
தோள் சீலை போராட்டம் நடைபெற்றதன் 200வது ஆண்டு விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து சாலை மார்க்கமாகவே நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின். அங்கு அவருக்கு அமைச்சர் மனோதங்கராஜ் உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து நேற்றிரவு நாகர்கோவிலில் தங்கி ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அசைவ உணவுக்கு NO
இதனிடையே முதலமைச்சரின் உணவு மெனுவில் கடல் மீன்கள் உட்பட எந்த அசைவ வகை உணவுகளும் இடம்பெறவில்லை. சைவம் மட்டுமே போதும் என முதல்வர் தரப்பில் கட் அண்ட் ரைட்டாக அறிவுறுத்தப்பட்டிருந்ததால் அதற்கேற்ப வெஜ் மெனு மட்டுமே தயாரித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். தனது உடல்நலனை காப்பதில் கவனமாக உள்ள முதல்வர் ஸ்டாலின், உடலை ஃபிட்டாகவும், ஆரோக்யமாகவும் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுகிறார்.

70 வயது
70 வயதிலும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, சைக்கிளிங் செல்வது, நடை பயிற்சி செய்வது, சுற்றுப்பயணம் செல்வது என தன்னை ஆக்டிவாகவே வைத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே பயணங்களின் போது அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன் என அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூட முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ரிடர்ன்
கடந்த முன்று நாட்களாக மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுப்பயணங்களில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடியிலேயே மதிய லஞ்ச் சாப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications