மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு.. பாலியல் தொல்லை கொடுத்த பரமசிவன் கைது.. டாக்டர் ஹரீஷ் எங்கே?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை முதுகலை மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீனியர் மாணவர் டாக்டர் ஹரீஷை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் மாணவி ப்ரீத்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.

இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி கல்லூரி செல்லாமல் இவர் விடுதியிலேயே தங்கிவிட்டதாக தெரிகிறது. கல்லூரி முடிந்து சக மாணவிகள் விடுதிக்கு சென்றனர்.
அப்போது சுகிர்தாவுடன் தங்கியிருந்த மாணவிகள் அவருடைய அறைக்கு சென்ற போது அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி சுகிர்தா இறந்து கிடந்தார்.
உடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவரை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்து பாட்டிலும் இருந்தது. அந்த மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்து என்றனர்.
மேலும் அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் டாக்டர் பரமசிவன் மயக்கவியல் துறை பேராசிரியர் தன்னை உடலளவிலும் மனதளவிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் டாக்டர் ஹரீஷ், டாக்டர் ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுகிர்தாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பரமசிவன், ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் கல்லூரி நிர்வாகம் அளித்த அறிக்கையில் பேராசிரியர் சஸ்பெண்ட் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் விடுதியில் வரும் புகார்களை விசாரிக்க குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேராசிரியர் பரமசிவன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது போல் மாணவிக்கு மனரீதியாக டார்ச்சர் கொடுத்த டாக்டர் ஹரீஷ் எனும் சீனியர் மாணவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் சுகிர்தாவால் குற்றம்சாட்டப்பட்ட ப்ரீத்தியிடம் தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications