தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்- மத்திய, மாநில அரசுகள் மீது சீமான் புகார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம், மக்களிடம் கருத்து கேட்காமல், மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மீனவர்களின் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் மீனவர்களின் உயிரிழப்பும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுக மறுசீரமைப்பு பணியை தொடங்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 மீனவர்களை உயிர்பலியாகி உள்ள தேங்காப் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு மீனவர்களோடு கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : இந்த துறைமுகத்தை கட்டும் பொழுது கடலோடு வாழும் மக்களிடம் கருத்து கேட்காமல் இந்த நிலத்தினுடைய தன்மை, நீரோட்டத்தின் உடைய சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் அரசு தன்னிச்சையாக கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் கட்டுமான பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 300 மீட்டர் முகத்துவாரம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 40 மீட்டர் அளவில் அமைக்கப்பட்டதால் படகுகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இங்கு உள்ள அலை தடுப்பு சுவரை திட்டமிட்டு அன்று அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல. தொடர்ந்து வருகின்ற ஆட்சியாளர்கள். மீனவ மக்களை ஏமாற்றுகிறார்கள். குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றவுடன் இந்த நாட்டையே கொந்தளிக்க செய்தார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் நிராகரிக்கப்பட்ட மக்களாக உள்ளனர். தற்போது அரசு தரப்பில் மறு சீரமைப்புக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகும் கூறுகிறார்கள்.
என்றைக்கு மத்திய அரசு இந்த திட்டத்தை ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ஒக்கி புயலில் கடலில் மிதந்த மீனவர்கள் உடலை கூட எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முன்வராத மத்திய, மாநில அரசுகள், இந்த விஷயத்தில் மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
-
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications