கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தகாலத்தில் இப்படியொரு எம்.எல்.ஏ.வா? குடியரசு தின விழாவில் பங்கேற்க சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 18 கிமீ தூரம் சைக்கிளில் சென்றார்.

சாதாரண கவுன்சிலர் ஒருவரே சொகுசு காரில் பறக்கும் நிலையில், எம்எல்ஏ ஓருவா் சைக்கிளில் சென்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

TN MLA went on a bicycle to participate in the Republic Day celebrations

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்களாக நேற்று குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லியே பதற்றமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்தும் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் நாகா்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 18 கிமீ தூரம் சைக்கிளில் சென்றார். பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட மணலியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் சைக்கிளில் சென்றார்.

அவருக்கு வழி நெடுகிலும் உள்ள பொதுமக்கள் ஆதரவு கொடுத்தனர். இந்த காலத்தில் சாதாரண கவுன்சிலர் ஒருவரே சொகுசு காரில் பறக்கும் நிலையில், எம்எல்ஏ ஓருவா் சைக்கிளில் சென்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கன்னியாகுமரி-களியக்காவிளை சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனோ தங்கராஜ் எம்எல்ஏ தக்கலையில் இருந்து நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் வரை 17 கிமீ நடந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kanyakumari District Padmanabhapuram Block DMK MLA Mano Thankaraj cycled 18 km to attend the Republic Day celebrations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X