குமரியில் கனமழை எதிரொலி.. என்னாது இது ரயில் தண்டவாள பாதையா?.. பார்க்க ஆறு மாதிரியே இருக்கே!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில் அங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில் தண்ணீர் தேங்கி பார்ப்பதற்கே ஆறு போல் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இது தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று முதல் இன்று வரை இரு தினங்களாக மழை இல்லாமல் குளிர் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

தண்ணீர்
இந்த மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சாலைகள் முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன் புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
— Southern Citizen 🇮🇳 (@Southern_Citizn) November 13, 2021 |
வெள்ளம்
வீடுகளைச் சுற்றி ஓடும் வெள்ளத்தை பார்க்கும் போது ஏதோ ஆற்று பகுதி போல் ஆர்ப்பரிக்கிறது. வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நாளை மறுநாள்தான் கன்னியாகுமரியில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் ரயில் தண்டவாளத்தில் நேற்றைய தினம் தண்ணீர் தேங்கியிருந்தது.

பாதை
ஆனால் இன்றோ ரயில் தண்டவாள பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி ஏதோ ஆறு போல் தெரிகிறது. நிறைய பேர் இதை ரயில்வே தண்டவாளமா இல்லை ஆறா என கேட்டு வருகிறார்கள். இதனால் அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

கிளை பகுதி
இது தாமிரபரணி ஆற்றின் கிளை பகுதி என நினைத்துவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். இது போல் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கவில்லையா என கேள்வி எழுப்புகிறார்கள். இது படகு போக்குவரத்துக்கானது. ரயில்வே துறையின் சிறப்பு ஏற்பாடு என்கிறார்கள்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications